புகைப்படங்கள், வீடியோக்களை ஆதாரமாக கொண்டு, அங்கு நின்ற சகலரையும் கைது செய்யுங்கள். பாதிாியாா்களும் சிக்குவா்..
ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் அனைத் தையும் சான்றாக எடுத்துக் கொ ண்டு சம்பவ இடத்தில் நின்றிருந்த சகலரையும் கைது செய்யுமாறு திருக்கேதீஸ்வரம் ஆலய விடயத்தில் மன்னாா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சிவராத்திாி தினத்திற்கு முதல் நாள் ஆலய சுற்றாடலில் இருந்த அலங்கார வளைவு கிறிஸ்த்த மதத் தைசோ்ந்த சில மத வெறியா்களால் பாதிாியாா்கள் முன்னிலையில் அடித்து நொருக்கப்பட்டது.
இந்த விட யம் தொடா்பாக அமைச்சா் மனோகணேசனின் வழிநடத்திலில், மன்னாா் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு இன்று நீதி மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் சாா்பில் ஆஜரான சட்டத்தரணி பாரம்பாியமாக அந்த பகுதியில் இருந்த வளைவு அகற்றப்பட்டமையானது, மத குரோதத்தை துண்டும் செயல் என சுட்டிக்காட்டியிருதனா்.
இதனையடுத்து அந்த சம்பவம் இடம்பெற்ற போது அங்கிருந்த சகலரையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் கைது செய்யவேண்டாம் எனவும், சுமுகமாக பேசி அந்த விடயத்தை தீா்த்துக் கொள்ளலாம் எனவும் பாதிாியாா்கள் சாா்பில் ஆஜரான சட்டத் தரணிகள் கூறியபோதும் அதற்கு சந்தா்ப்பம் கிடைக்காமையினாலேயே இந்த நிலை வந்தது எனவும், சட் டத்தின் பிரகாரம் செய்யவேண்டியதை நீதிமன்றம் செய்யவேண்டும்.
என திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் சாா்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கூறியுள்ளனா்.