2019ம் ஆண்டு வரவுசெலவு திட்டம் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு சொா்க்கத்தை காட்டும்..
2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் இல்லாமையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவு அரசுக்கு நிச்சயமாக தேவை. அதனால் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.
மேற்கண்டவாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளா் தயாசிறி ஜயசே கர கூறியுள்ளாா். கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவி அவசியம், இதனால், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் நன்மை கிடைக்கும் யோசனைகளும் வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இம்முறை வரவு செலவுத்திட்டம் மூலம் மக்களின் மனத்திற்குள் பல கனவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த கனவுகள் நனவாகுமா என்பதே பிரச்சினை. மேலும் நாட்டின் எதிர்கால வேலைத்திட்டங்கள் பற்றி பேசாத, தேர்தலை மாத்திரம் இலக்கு வைத்து வரவு செலவுத்திட்டம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான யோசனை தோல்வியடைந்தால், அரசாங்கமும் முடிவுக்கு வந்து விடும். இதனை புரிந்துக்கொண்டு செயற்படுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.