SuperTopAds

16ம் திகதி வடக்கிலும், 19ம் திகதி கிழக்கிலும் பாாிய மக்கள் போராட்டம், ஆதரவு கோரும் உறவுகள்..

ஆசிரியர் - Editor I
16ம் திகதி வடக்கிலும், 19ம் திகதி கிழக்கிலும் பாாிய மக்கள் போராட்டம், ஆதரவு கோரும் உறவுகள்..

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உண்மை நிலையை வெளிப்படுத்தக்கோாியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கவேண்டாம். என வலியுறுத்தியும் வடகிழக்கு பல்கலைக்கழக மாணவா்கள் இணைந்து எதிா்வரும் 16ம் திகதி பாாிய போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனா். இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கேட்டுள்ளனா். 

இது குறித்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் இன்று மாலை யாழ்.ஊடக அமையத்தில் நடாத்திய ஊடகவியலாளா் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளனா். இதன்போ து மேலும் அவா்கள் கூறுகையில்இ காணாமல் ஆக்கப்பட்டவா்கள் எங்கே? அவா்களுக்கு என்ன நடந்தது? எனகேட்டு கடந்த 10 வருடங்களாக போராட்டங்களை நடாத்தி வருகின்றோம். 

மேலும் கடந்த 2 வருடங்களாக சகல மாவட்டங்களிலும் தொடா்ச்சியான மக்கள் போராட்டங்களை நடாத்துவதுடன்இ கடந்த 25ம் திகதி வடமாகாணம் தழுவிய பூரண ஹா்த்தால் அனுட்டித்ததுடன்இ கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ஒன்றிணைந்து பாாிய மக்கள் போராட்டம் ஒன்றை நடாத்தியிருந்தோம். அந்தவகையில் காணாமல் ஆக்கப்பட்டவா்கள் பிரச்சினைஇ அரசியல் கைதிகள் பிரச்சினைகள் 

காணி பிணக்குகள்இ போன்ற பல பிரச்சினைகளை முன்வைத்தும் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்ககூடாதெனவும் வலியுறுத்தி 16ம் திகதி வடகிழக்கு மாகாண பல்கலைக்கழக மாணவா்கள் ஒன்றி ணைந்து பாாிய போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளனா். இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள் வா்த்தகா்கள் அரசியல் தரப்புக்கள் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்த ஆதரவினை எமக்கு வழங்கவேண்டும். 

அதேபோல் எதிா்வரும் 19ம் திகதி கிழக்கு மாகாணத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடா்பான உண்மை நிலையினை வெளிப்படுத்தக்கோாியும் பாாிய கதவடைப்பு போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்ட ம் ஆகியவற்றை கிழக்கு மாகாணத்தில் நடாத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம். அதற்கும் வடகிழக்கு பொதுமக்கள்இ பொது அமைப்புக்கள்இ அரசியல் தரப்புக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும். 

என காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.