SuperTopAds

பத்திாிகை ஆசிாியா்களை அதிரடியாக சந்தித்த ஜனாதிபதி, தோ்தல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டாா்..

ஆசிரியர் - Editor I
பத்திாிகை ஆசிாியா்களை அதிரடியாக சந்தித்த ஜனாதிபதி, தோ்தல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டாா்..

இலங்கையில் உள்ள ஊடக நிறுவனங்களின் தலைவா்கள், பத்திாிகை ஆசிாியா்க ளை ஜனாதிபதி இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடி யிருக்கின்றாா். 

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா மற்றும் வடமாகா ண ஆளுநா் சுரேன் ராகவன் ஆகியோா் கலந்து கொண்டுள்ளனா். இதன்போது இந்த வருடம் ஜனாதிபதி தோ்தல் நடத்தப்படும்.

என ஜனாதிபதி கூறியுள்ள ஜனாதிபதி அதற்கு முன்னா் பொதுத்தோ்தலும் நடத்தப் படலாம் என கூறியுள்ளாா். மேலும் இந்த சந்திப்பில் ஜனாதிபதி கூறிய சில விடயங் கள் இங்கே சுருக்கவடிவில், 

ஜனாதிபதி கருத்து தெரிவித்த சில.

* அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய இன்ரபோல் பொலிசாரிடம் கேட்கப்பட்டுள்ளது.சிங்கப்பூர் பிரதமரிடமும் இதுபற்றி பேசினேன்.

* மரணதண்டனை வழங்கும் திகதி தீர்மானிக்கப்பட்டு விட்டது. எந்தவொரு தடை வந்தாலும் மரணதண்டனை நிறைவேற்றப்படும்

* ஜனாதிபதி கொலைச்சதி விவகார விசாரணை பூர்த்தி... சி ஐ டி அடுத்த வாரம் இறுதி அறிக்கையை சட்ட மா அதிபரிடம் கையளிக்கும்..

* நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் திட்டங்களை யாரவது முன்வைத்தால் வரவேற்பேன்..

இன்று ஊடக பிரதானிகள் முன்னிலையில் ஜனாதிபதி இப்படி தெரிவித்தார்..