மங்களவின் மரண அடி..! 2019 பாதீட்டில் என்ன இருக்கிறது தொியுமா?

ஆசிரியர் - Editor I
மங்களவின் மரண அடி..! 2019 பாதீட்டில் என்ன இருக்கிறது தொியுமா?

04:26 PM உள்நாட்டு சாராய உற்பத்திகளின் விலைகள் இன்று நள்ளிரவில் திருத்தம். கள்ளு  சாராயத்தின் விலையில் மாற்றமில்லை

04:24 PM ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து அலுவலக நேரங்களில் அதிவேக நெடுஞ்சாலையின் கட்டணம் 100 ரூபாயால் அதிகரிப்பு

04:23 PM மடு தேவாலயத்தை அபிவிருத்தி செய்ய 200 மில்லியன் ஒதுக்கம்.

04:19 PM வரவு செலவு திட்ட வாசிப்பு நிறைவு. நாடாளுமன்றம் நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

04:19 PM கெசினோ அனுமதி கட்டணம் 200 மில்லியனிலிருந்து 400 மில்லியன் ரூபாய் வரை அதிகரிப்பு

04:17 PM நாளையிலிருந்து அதிசொகுசு வாகன இறக்குமதி வரியில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன். வாகன இறக்குமதிக்காக விதிக்கப்பட்டுள்ள 200 சதவீத வைப்பு இரத்து செய்யப்படவுள்ளது.

04:16 PM சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவிலிருந்து 5 ரூபாயால் அதிகரிப்பு 

04:14 PM யுத்தகாலத்தில் அழிவடைந்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய 5 பில்லியன் ஒடுக்கீடு

04:13 PM புகையிலைக்கான வரி 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை

04:10 PM வடக்கில்  10 பொருளாதார மத்திய நிலையங்கள். பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக வங்கிகளுக்கு 250 மில்லியன் ஒதுக்கீடு

04:06 PM இராணுவ வீரர்களின் சீருடைக்கான கொடுப்பனவை அதிகரித்தல்

04:03 PM இயற்கை அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்காக 20,000 மில்லியன்

04:00 PM சமுர்த்தி அபிவிருத்திக்கு 1,000 பில்லியன் 

03:59 PM கலைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை. 

03:59 PM பிளாஸ்ரிக், பொலித்தீன்  உற்பத்திகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் செப்டெம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயம் பதிவு செய்வது அவசியம்.

03:57 PM இயற்கை அனர்தங்களால் ஏற்பட்ட  பாதிப்புகளுக்கான நட்ட ஈட்டை துரிதமாக வழங்க நடவடிக்கை 

03:55 PM சமுர்த்தி வேலைத்திட்டத்தை மீள கட்டமைக்க நடவடிக்கை. சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை 6 இலட்சத்தால் அதிகரிக்கப்படும்.

03:53 PM இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை வலுப்படுத்த 100 மில்லியன். கிராம சக்தி வேலைத்திட்டத்துக்காக 500 மில்லியன்.

03:51 PM குடிநீர் திட்டத்துக்காக 45,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:47 PM அரச பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 40 பில்லியன் ஒதுக்கீடு 

03:46 PM ஜூலை முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவு

03:45 PM அதிக வசதிகளையுடைய ரயில் சேவைகளுக்கு அதிக கேள்விகள் நிலவுகின்றன. இதற்காக 4 புதிய ரயில் பாதைகள் அமைக்ககப்படவுள்ளன. மாலபே- கொழும்பு இலகு ரயில் பாதைக்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

03:45 PM அரச பணியாளர்களுக்கு 2,500 ரூபாய் அதிகரிப்பும் ஓய்வூதியர்களின் கொடுப்பனவை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வுக் காணவும் நடவடிக்கை. ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 12,000 மில்லியன் ஒதுக்கீடு

03:43 PM ஓட்டோ, சிறிய கார்களின் போக்குவரத்தை அதிகரிக்க கடன் திட்டமுறையொன்று அறிமுகப்படுத்தப்டவுள்ளது. அதற்கமைய தற்போதைய பாவனையிலுள்ள ஓட்டோக்கள் அகற்றப்பட வேண்டியுள்ளது.

03:41 PM 2016 ஆம் ஆண்டு எடுத்த தீர்மானத்துக்கமைய, அரச பணியாளர்களின் சம்பளம் 107 சதவீத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  மேலும் சம்பள தொகையை அதிகரிக்க 4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

03:39 PM கிராம  வீதிகளை புனரமைப்பு செய்ய 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:37 PM கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுபடுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:36 PM போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல், நகர வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை கருத்திற்கொண்டு பழைய கட்டடங்களை புனரமைக்க நடவடிக்கை

03:35 PM யாழ்ப்பாணம் பழைய நகர சபையை புனரமைப்பு செய்ய 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.கண்டியை அபிவிருத்தி செய்ய தற்போது 900 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

03:34 PM கொழும்பில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் வகையில் 10,600 மில்லியன் ஒதுக்கீடு.

03:33 PM அருவக்காடு கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்கு 7000 மில்லியன் ஒதுக்கீடு.

03:30 PM தேசிய ஒலிம்பிக் நிதியத்தை வலுப்படுத்த நடவடிக்கை

03:29 PM கொலன்னாவ மற்றும் அலுவிகார விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய 300 மில்லியன் 

03:25 PM சுகாதார துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 24,750 மில்லியன் ஒதுக்கீடு

03:21 PM விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்க நடவடிக்கை

03:20 PM பொருளாதார அபவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் உள்ளடக்கம்.

03:19 PM  3இலட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் தோற்றினாலும்  35,000  மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்றனர். ஏனை​யோர் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பிருந்தும் நிதி வசதி இல்லாமல் கல்வியைத் தொடர  முடியாதவர்களுக்கு ' மை பியுச்சர்' என்ற திட்டத்தின் கீழ்  1.1 மில்லியன் ரூபாய் வட்டியற்ற கடன் வழங்கப்படும் .

03:19 PM பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை அதிகரிக்க 32,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:18 PM பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:17 PM கம்பெரலிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்த 48,000 மில்லியன் ஒதுக்கீடு 

03:15 PM ருஹூணு பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடமொன்றை நிறுவ நடவடிக்கை

03:14 PM நிபந்தனையுடன் வெளிநாட்டில் உயர்கல்வியை தொடர வாய்ப்பு. 10 வருடங்கள் இலங்கையில் தொழில்புரிய வேண்டும் என்பது கட்டாயம்..

03:13 PM இலங்கையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உலகில் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு  

03:10 PM கல்வித் துறைக்கு 32 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03:10 PM தகவல் தொழிநுட்ப சேவை தொழிற்றுறைக்கு கலைப்பட்டத்தாரிகளை இணைத்துக்கொள்வதற்காக 1300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

03:09 PM வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க அனைத்துவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

03:07 PM சகல உற்பத்திகளினதும் தரத்தை உயர்த்த நடவடிக்கை

03:06 PM தனியார் நிறுவனங்களுடன் கலந்துரையாடிய பின்னர் தேசிய வருமான சட்டத்தில் தேவையான திருத்தத்தை மேற்கொள்ளுதல்

03:01 PM அம்பேபுஸ்ஸ, வீரவில ஆகிய இடங்களில் இரண்டு விவசாய நிலங்களை சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து அமைப்பதற்கும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு கைவினைப் பொருட்களை செய்யும் மத்திய நிலையம் ஒன்று தொம்பே கிராமத்தில் அமைக்கப்படவுள்ளதுடன், இதற்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

03:00 PM வடக்கில் முஸ்லிம்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை

02:57 PM தனியார் நிறுவனங்களும் பிரசவ விடுமுறையை 3 மாத காலம் வழங்கும் வகையில் வழிவகைகளை செய்தல்.

02:54 PM 250 க்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களில் சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையத்தை அமைக்கும் தனியார் நிறுவனங்களுக்கு என்டபிரைஸஸ் ஸ்ரீ லங்காவின் கீழ் பாதுகாப்பு நிவாரண நிதியை வழங்க நடவடிக்கை

02:53 PM வெளிநாட்டில் தொழில்புரிவொருக்கு சீனமாளிகா கடன் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

02:53 PM 25 வருடங்களில் செலுத்தக் கூடிய வகையில் 6 சதவீத வட்டி அடிப்படையிலான இலகுக் கடன் திட்டங்களை இளம் ஜோடிகளுக்கு வழங்க நடவடிக்கை

02:51 PM வடக்கு கிழக்கு ஆகிய பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். அத்துடன் அங்குள்ள மக்களுக்காக வீடமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க 24 பில்லியன் ஓதுக்கீடு

02:49 PM சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்களை அதிலிருந்து மீட்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்

02:47 PM சிறுநீரக நோயாளர்களுக்கு 1800 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

02:46 PM அங்கவீனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை 3,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை 

02:45 PM மொரகாகந்த, களுகங்கை திட்டங்களை அடுத்தாண்டு நிறைவு செய்ய எதிர்பார்ப்பு

02:45 PM நாட்டில் சகல பாடசாலை மாணவர்களுக்கும் ஒரு கோப்பை பால் இலவசமாக வழங்கப்படும்

02:40 PM புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு அவை தனியாருக்கு நிர்வகிக்க கொடுக்கப்படும்.

02:39 PM 100,000 க்கு மேற்பட்டோருக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. மொனராகலையில்  மாத்திரம் 35,000 குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. கடந்த அரசாங்கம் இதனை கவனிக்கவில்லை. இந்த வருடம் சகலருக்கும் கழிப்பறை வசதிகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் 4 பில்லியன் ஒதுக்கீடு

02:34 PM மீன் ஏற்றுமதி மூலம் 209 மில்லியன் ரூபாய் இலாபம் வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது. 

02:33 PM பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைத் தொடர்பில், தேயிலை சபையுடன் கலந்துரையாடி விரைவானத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

02:31 PM கறுவாப்பட்டையை  ஏற்றுமதி செய்யும் வகையில், அத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்கு 75 மில்லியன் ரூபாய் ஒதுக்க நடவடிக்கை 

02:30 PM தேசிய இளைஞர் சேவைகள் சபையின் உறுதிப்படுத்தப்பட்ட பயனாளிகளிகளுக்கு என்டபிரைஸஸ் கடன் திட்டத்தை பெற்றுக்​கொடுக்கும் போது முக்கியதுவம் வழங்கப்படும். இதுவரை 60,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

02:29 PM இறப்பர் உற்பத்திக்கு 800 மில்லியன் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தெங்கு உற்பத்தியை அதிகரிக்கவும் தெங்கு உற்பத்தியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கவும் நடவடிக்கை 

02:28 PM விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்க 250 பில்லியன் ஒதுக்கப்படும். அநுராதபுரம், குருநாகல், புத்தளம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நடவடிக்கை மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் தெரிவிப்பு.

02:25 PM சிறிய மற்றும் மத்திய தர வர்த்தகர்களை ஊக்குவிக்க நடவடிக்கை

02:21 PM என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த நடவடிக்கை. இதன் மூலம் கடன் வசதிகளை வழங்க நடவடிக்கை

02:19 PM கடந்தாண்டு அரசியல் சூழ்ச்சியால் முதலில் நிறுத்தப்பட்டது கம்பெரலிய வேலைத்திட்டமாகும்.

02:09 PM பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு செல்ல முடிந்த போதும், கடந்தாண்டு நவம்பர் மாதம் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கைக்கு கிடைக்கவிருந்த பல கடன் திட்டங்கள் இல்லாமல் போயின

02:08 PM வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படுவதற்கு முன்னர், நிதியமைச்சர் மங்கள சமரவீர சபையில் தற்போது உரையாற்றுகிறார்.

02:05 PM நிதியமைச்சர் மங்கள சமரவீர, 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்ததை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க தயாராகிறார்.

02:04 PM நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் ஆரம்பம்.

02:00 PM 73 ஆவது வரவு செலவுத் திட்டம், இலங்கையில் 24 ஆவது நிதி அமைச்சரான, மங்கல சமரவீரவால் சற்று நேரத்தில் சபையில் சமர்பிக்கப்படவுள்ளது.

01:58 PM 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், நாடாளுமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் சமர்பிக்கப்படவுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வருகைத்தந்தவாறு உள்ளனர்.

01:33 PM இம்முறை வரவு​ செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் 2,500 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

12:29 PMநிதியமைச்சர் மங்கல சமரவீரவால், இன்று (05) சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில், அரச ஊழியர்கள், ஓய்வுப்பெற்றவர்கள், சாதாரண மக்கள் ஆகியோருக்கு நிவாரணங்கள் பல உள்ளடக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் வஜி​ர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

02:04 PMஅரசாங்கத்தின் ஐந்தாவது வரவு செலவுத் திட்டத்தில், மக்களை வலுவூட்டுதல், வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு நிவாரணமளித்தல் ஆகியன உள்ளடக்கப்பட்டிருப்பதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

11:54 AMஉயர்தரத்தில் சித்திப்பெற்றவர்களுக்கு, தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்மொன்றும், வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

11:44 AMஅரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில், இம்முறை வரவு செலவு திட்டத்தில் யோசனையொன்று முன்வைக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.

11:32 AMஇன்று  சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவுத் திட்டத்தினூடாக, விவசாயிகளுக்கு இலவசமாகப் பசளை வழங்குவதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்வுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

11:20 AMகடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றத்துக்குப் பின்னர் நிறுவப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், அதன் ‘மங்கல’ வரவு – செலவுத் திட்டத்தை, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் இன்று சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு