SuperTopAds

திருகோணமலை கந்தளாய் காட்டில் அரிய வகை வெண்ணிற மரைக் குட்டி!

ஆசிரியர் - Admin
திருகோணமலை கந்தளாய் காட்டில் அரிய வகை வெண்ணிற மரைக் குட்டி!

திருகோணமலை, கந்தளாய் - சூரியபுர, சுண்ணக்காடு காட்டுப் பகுதியில், அரிய வகையைச் சேர்ந்த வெள்ளை மரைக் குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக, கந்தளாய் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

காட்டுப் பகுதியில் விறகு எடுக்க சென்ற இராணுவத்தினர், தாயை விட்டு அநாதரவான நிலையிலிருந்த இம்மரையை மீட்டு, கந்தளாய் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

3 அடி உயரமான இந்த மரைக் குட்டி ஒரு மாத வயதுடையதாக இருக்கலாம் எனவும், இதன் தொப்புளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், கந்தளாய் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். 

வெள்ளை நிறத்தைக் கொண்ட மரை ஒன்று, சிங்கராஜா காட்டுப் பகுதிக்குள் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் வனவிலங்குகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.