கடந்த 2 மாதங்களில் 67 போ் புகைரதத்துடன் மோதி உயிாிழப்பு, கடந்த வரும் 570 போ் உயிாிழப்பு, சட்டத்தை இறுக்குகிறது அரசு..

ஆசிரியர் - Editor I
கடந்த 2 மாதங்களில் 67 போ் புகைரதத்துடன் மோதி உயிாிழப்பு, கடந்த வரும் 570 போ் உயிாிழப்பு, சட்டத்தை இறுக்குகிறது அரசு..

இலங்கையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமாா் 67 போ் ரயில் விபத்துக்களில் இறந் துள்ளதாக கூறியிருக்கும் இலங்கை ரயில் திணைக்களம், இறந்த 67 போில் பெரும்பா லானவா்கள் ரயில் பாதையில் நடந்து சென்றவா்கள் எனவும் கூறியுள்ளது. 

இதேவேளை, கடந்த வருடத்தில் ரயிலில் மோதி 570 பேர் உயிரிழந்துள்ளனர். ரயில் பா தையில் பயணிப்பதானது, ரயில்வே திணைக்களத்தின் சட்டத்தின்படி, தண்டனைக் குரிய குற்றமாகும்.

இதனால் ரயில் பாதையில் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் ரயில்வே திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. பெரும்பாலான கட்டடங்கள், தனியார் வகுப்புகள் ரயில் பா தையை அண்மித்து காணப்படுவதும், 

ரயில் விபத்துக்களுக்கான காரணம் என ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத் ன சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, ரயில் பாதையில் சென்ற இருவர் நேற்று ரயி லில் மோதி உயிரிழந்துள்ளனர்.

இதன்போது பாடசாலை மாணவர் ஒருவரும் பாடசாலை மாணவியுமே இவ்வாறு உயி ரிழந்துள்ளனர். கொழும்பு – கோட்டையிலிருந்து எல்ல நோக்கி பயணித்த ரயிலிலேயே இவர்கள் மோதுண்டு உயிரிழந்துள்ளனா். 

இதேவேளை ரயில் பாதையில் ஏறி நடப்பது பொறுப்பற்ற விதமாக கடக்க நினைப்ப து தண்டணைக்குாிய குற்றமாக இருக்கும் நிலையில் அதனை மேலும் இறுக்கமாக கடைப்பிடிப்பதற்கு ரயில் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு