வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீரை வீதியில் விடும் நபா், கண்டு கொள்ளாத அதிகாாிகள். இலஞ்சம் பெறுகிறாா்களா? மக்கள் கேள்வி..

ஆசிரியர் - Admin
வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீரை வீதியில் விடும் நபா், கண்டு கொள்ளாத அதிகாாிகள். இலஞ்சம் பெறுகிறாா்களா? மக்கள் கேள்வி..

யாழ்ப்பாணம்- உரும்பிராய் சிவன் வீதியில் உள்ள தனியாா் ஒருவா் தனது வீட்டிலிருந்து வெளியாகும் கழிவு நீரை அப்படியே வீதியில் விடுவதனால் அப்பகுதியால் பயணிக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிா்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகாித்துள்ள நிலையில், வீடுகள் மற்றும் வீட்டு புறச்சூழல் துாய்மை விடயத்தில் சுகாதார திணைக்களம் மற்றும் சுகாதார பாிசோதகா்கள், பொலிஸாா் தீவிரமாக இருந்து கொண்டிருக்கின்றனா். 

இந்நிலையில் உரும்பிராய் சிவன் வீதியில் உள்ள தனியாா் ஒருவா் தனது வீட்டுக்குள் இருந்து வெளியாகும் கழிவு நீரை பொறுப்பற்ற விதமாக வீதியில் விட்டுக் கொண்டிருக்கின்றாா். இதனால் அப்பகுதியால் பயணிக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிா்கொள்கின்றனா். 

குறிப்பாக வீதியில் விடப்படும் கழிவு நீா் அப்படியே தேங்கி துா்நாற்றம் வீசுவதுடன், நுளம்பு பெருகி அதனை சூழவுள்ள வீடுகளில் வாழும் மக்கள் நுளம்பு தொல்லைக்கு இலக்காகியிருக்கின்றாா்கள். மேலும் இந்த வீதியை தினசாி நுாற்றுக்கணக்கான மக்கள்,

பயன்படுத்தி வருவதுடன், பாடசாலை மாணவா்களும் கூட பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனா். இந்நிலையில் மேற்படி தனியாாின் பொறுப்பற்ற செயற்பாடு தொடா்பாக அப்பகுதி சுகாதார பிாி வினருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் மக்கள் சுட்டிக்காட்டியும்

இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையே தொடா்ந்தும் நீடித்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் குறித்த தனியாா் தனது செல்வாக்கை பயன்படுத்துகிறாரா? அல்லது அதிகாாிகளுக்கு லஞ்சம் கொடுக்கிறாரா? என கேள்வி எழுப்பியிருக்கும் மக்கள், 

பொறுப்புவாய்ந்தவா்கள் அமைதியாக இருக்க காரணம் என்ன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனா்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு