“கம்பரெலிய” என்ற பெயரை உச்சாிக்கவே எனக்கு விருப்பமில்லை, அது அரசை பாதுகாப்பவா்களுக்கான இலஞ்சம்..

ஆசிரியர் - Editor
“கம்பரெலிய” என்ற பெயரை உச்சாிக்கவே எனக்கு விருப்பமில்லை, அது அரசை பாதுகாப்பவா்களுக்கான இலஞ்சம்..

கம்பொரெலியா எனும் கிராம எழுச்சி திட்டமானது அரசைப் பாதுகாக்கும் தரப்பினர் களுக்கு கொடுக்கும் இலஞ்சமென ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நா யகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்.நகரிலுள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடாத்திய ஊடகவியி யலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இச் சந்திப்பின் போது கம் பொரேலிய திட்டம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் 

பதிலளிக்கையிலையே இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலு ம் தெரிவிக்கையில். ஐனாதிபதியின் கிராம சக்தி எனும் திட்டமொன்று உள்ளது. அதே போன்றே பிரதமரின் கிராம எழுச்சி திட்டமொன்றும் உள்ளது. 

இந்த கிராம எழுச்சி திட்டம் தான் கம்பொரேலிய திட்டமாகும். இத் திட்டத்தினூடாக அபிவிருத்தி எனும் பெயரில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கப்படுகி றது. ஆனால் அந்த அபிவிருத்திக்கான நிதி அனைத்துப் 

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்படுவதில்லை. அரசாங்கத் தரப்பினர்க ளுக்கும் அதன் பங்காளிகளுக்கும் குறிப்பாக அரசைப் பாதுகாக்கின்ற தரப்பினர்களு க்குமே ஒதுக்கப்படுகிறது. 

அதனடிப்படையிலையே தமிழ்த் தரப்பினர்களுக்கும் தற்போது ஒதுக்கப்படுகிறது. ஏன்னைப் பொறுத்தவரையில் அரசைப் பாதுகாக்கும் தரப்பினர்களுக்கு கொடுக்கும் இலஞ்சமாகவே இதனை நான் பார்க்கின்றேன்.

ஆனாலும் அத் திட்டத்தினூடாக மக்களுக்கு பயனுள்ளது என்றால் அதனை நாங்கள் வரவேற்போம். இருந்தும் இந்த நிதி எந்த அடிப்படையில் எவ்வாறு ஒதுக்கப்படுகிற தென்பது தொடர்பில் கொழும்புடன் பேசியிருக்கின்றேன். 

அதாவது ஆளுங்கட்சியாக இருப்பவர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்க ளுக்குமே வழங்கப்படுவதாகும் என்று குறிப்பிட்டார்.

Radio
×