திருக்கோணேஸ்வரா் ஆலய வீதியில் உள்ள சிவலிங்கத்தை உடைத்த சிங்களவா்கள், அங்கு புத்தா் சிலை கட்டப்போவதாக அடாவடி..
திருகோணமலை- திருக்கோணேஸ்வரம் கோவிலுக்கு செல்லும் வழியில் சிவலிங்கம் அமைக்கப்பட்டால் அந்த இடத்தில் தாம் புத்தா் சிலையை அமைப்போம் என சிங்கள வா்கள் கூறிவரும் நிலையில்இ குறித்த பகுதியில் பதற்ற நிலை உருவாகியிருக்கின்து.
சிவராத்திரி முடியும் வரையில் குறித்த இடத்தில் சிவலிங்கத்தை வைப்பதற்கு கோயி ல் நிர்வாகத்தினர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து ள்ள நிலையில்இ தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகிறது.
சிவராத்திரியை முன்னிட்டுஇ திருகோணமலை – திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் வழியில் கோயில் நிர்வாகத்தினர் சிவலிங்கமொன்றை நிறுவினர். நேற்று (வியாழக்கிழமை) குறித்த சிலை நிறுவப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை குறித்த சிலை உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்த கோயில் நிர்வாகத்தினர்இ பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதில்
சிவலிங்கத்தை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளே உடைத்ததாக குறித்த பகு தியில் உள்ள கடையின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த விடயம் தொடர்பாக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள்
மறுப்பு தெரிவித்துள்ளனர். அத்தோடு குறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்திற் கு உரியதென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிவராத்திரி முடியும் வரையில் குறித்த இடத்தில் சிவலிங்கத்தை வைப்பதாகக் கூறி
கோயில் நிர்வாகத்தினர் சிலையை வைக்க முற்பட்டனர். எனினும் அவ்வாறு சிவலிங் கத்தை வைத்தால் புத்தரின் சிலையை வைப்பதாக கூறி அங்குள்ள சிங்களவர்கள் முரண்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.