சொத்து மதிப்பீடு வெளியிடப்பட்டமை, “முழு பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் பம்மாத்து வேலை..”
கடந்த வருட இறுதியில் ஆட்சி மாற்றம் நடைபெற்ற போது கோடிக்கணக்கான பணம் கைமாறப்பட்டதாக எழுந்த குற்றசாட்டுக்களின் அடிப்படையிலையே நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு வெளியிட கோரப்பட்டது.
அதனை வெளியிட்ட சில உறுப்பினர்களின் சொத்து விபரத்தை பார்க்கும் போது முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தது போல் உள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு பாராளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும். அதே போல தேர்தல் திணைக்களத்திற்கும் சமர்ப்பித்துள்ளோம்.
அவ்வாறான நிலையில், இப்ப சிலர் தமது சொத்து விபரத்தை வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு சிலரின் விபரத்தை பார்க்கும் போது , முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தமை அப்பட்டமாக தெரிகிறது. அதொரு பம்மாத்து வேலை.
எனது சொத்தாக ஶ்ரீதர் தியட்டர் கட்டடமும், கஸ்தூரியார் வீதி கட்டடமும் இல்லை. அதனை எனது சொத்தாக நினைக்காதீர்கள் . எனது சொத்துக்கள் தொடர்பில் நாடாளுமன்றத்திலும், தேர்தல் திணைக்களத்திலும் ஒப்படைத்துள்ளேன்.
எனது சொத்து விபரத்தை பார்க்க விரும்புவோர்கள். அவர்களிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். என தெரிவித்தார்.