ஜனாதிபதி- தமிழ்தேசிய கூட்டமைப்பு அதிரடி சந்திப்பு, எல்லாவற்றுக்கும் ஆமாம் போட்டாரம் ஜனாதிபதி..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி- தமிழ்தேசிய கூட்டமைப்பு அதிரடி சந்திப்பு, எல்லாவற்றுக்கும் ஆமாம் போட்டாரம் ஜனாதிபதி..

புதிய அரசியல் அமைப்பில் உள்ள முக்கிய 3 விடயங்களில் அதிகாரப் பகிர்வு விடய த்தில் எதிர்பு கிடையாது என்பதனால் உடனடியாக அதனை நிறைவேற்ற ஜனாதிபதி தலமையிலான நேற்றைய விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

புதிய அரசியல் அமைப்பு நிறைவேற்றுவதில் உள்ள தடையை நீக்கி அதனை முன் கொண்டு செல்வது தொடர்பில் ஆராய ஏற்பாடு செய்யுமாறு கூட்டமைப்பின் தலை வர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளின் பெயரில் 

மேற்படி சந்திப்பு நேற்று இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா , பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா மற்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட கலந்துரையாடலின் ஆரம்பத்தில் 

குறித்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுமாறு சம்பந்தன் கோரியதனால் இதன் நோ க்கத்தை விளக்குமாறு ஜனாதிபதி சம்பந்தனிடம் கோரினார். இதனையடுத்து உரைநிகழ்த்திய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 

இலங்கையில் ஏ.பி.ஆர்.சி முதல் பல முன்னெடுப்புக்கள் இடம்பெற்றபோதும் எதுவும் ஒப்பேறவில்லை. இவற்றினைகூறிய புதிய ஜனாதிபதி , புதிய அரசுகள் உருவா க்கப்பட்டு ஓர் புதிய தீர்வை முன்னெடுக்குமாறு கோரிய நிலையில் 

இந்த அரசு அதனை செய்கின்றதா இல்லையா என்பதனை தெளிவாக கூறவேண்டும். என்றார். இதன்போது பதிலளித்த ஜனாதிபதி நிச்சயமாக முன்னெடுக்கும் அதன் தற்போதைய நிலமையை விளக்குமாறு கோரினார்.

இதனையடுத்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அரசியல் யாப்பு உருவாக்கத்தின் தற்போதையவரையான நிலமையை தெரிவித்ததோடு யாப்பின் முக்கிய 3 அம்சங்களான நிறைவேற்று ஜனாதிபதி முறமை, 

தேர்தல் முறமை மற்றும் அதிகாரம் பகிர்வு ஆகிய விடயங்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறமை மற்றும் தேர்தல் முறமைகளிலேயே மாறுபட்ட கருத்து கானப்படுகின்றது. 

இருப்பினும் அதிகாரப் பபிர்வு விடயத்தில் ஒருமித்த தன்மையே கானப்படுகின்றது. இதேநேரம் நாட்டில் மிக முக்கியமானதும் அதிகாரப் பகிர்வே எனக் குறிப்பிட்டார். இதனால் முதலில் அதிகாரப் பகிர்வினை நடைமுறைப்படுத்தலாம் 

அது தொடர்பில் மீண்டும் அடுத்த வாரமே இதே சந்திப்பு இடம்பெறும் அதன்போது அந்தச் சந்திப்பில் ஆராய வேண்டிய விடயங்கள் தொடர்பில் தீர்மாணிக்க 4 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.

 குறித்த குழுவில் எம்.ஏ.சுமந்திரன் , டிலான்பெரேரா , ராஜித சேனாரத்னா , சரத் அமுனுகம என மூன்று கட்சிகளையும் உள்ளடக்கியவகையில் குழு நியமிக்கப்பட்டது. இதேநேரம் குறித்த சந்திப்பில் மேலும் திகாம்பரம் , 

ரிசாட்பதீயுதீன் மனோகணேசன் , லக்ஸ்மன் கிரியல்ல , ரவூவ்க்க்கீம் , நிமால் சிறிபாலடீசில்வா ஆகியோரும் பங்குகொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு