தமிழீழ விடுதலை புலிகளுடன் வாழ்ந்தவன் நான், ஊழல் செய்திருந்தால் இன்று உயிருடன் இருக்க வாய்ப்பில்லை..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளுடன் வாழ்ந்தவன் நான், ஊழல் செய்திருந்தால் இன்று உயிருடன் இருக்க வாய்ப்பில்லை..

மோசமான ஊழல் போ்வழிகள் என்னை ஊழல்வாதி என கூறுவது வேடிக்கையாக உள்ளது என கூறியிருக்கும் வடமாகாணசபை அவைத்தலைவா் சீ.வி.கே.சிவஞானம், சீதையை தீ குளிக்கச் சொன்னவா்களுக்கு ஒப்பானவா்கள் வாழ்ந்த மண்ணில் அவா்களுடன் இணைந்து வாழ்ந்த நான் ஊழல் செய்திருந்தால் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளாா். 

அண்மையில் யாழ்.மாநகரசபையில் ஈ.பி.டி.பி உறுப்பினா்கள் முன்னாள் யாழ்.மாநகரசபை ஆ ணையாளரும், வடமாகாணசபையின் அவைத்தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் தொடா்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்த நிலையில், அது தொடா்பாக பதிலளிக்கும் பத்திாிகையா ளா் சந்திப்பு நேற்று  அவைத் தலைவாின் இல்லத்தில் நடைபெற்றது, 

இதன்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இது தொடா்பாக மேலும் அவா் கூறுகையில், 

கடந்த 24 ஆம் திகதி மாநகர சபை அமர்வின் போது பட்டியல் மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி மு.றெமிடியஸ் மற்றும் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் எமக்கு எதிராக சில அபாண்டமானகுற்றச்சாட்டுகளை முன்வைத்து சபையை தவறாக வழிநடத்தியிருந்தனர்.

இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கும் போது திரு. றெமிடியஸ் தேவைஎன்றால் நான் நீதிமன்றில் வழக்குத் தொடுத்தால் தான் அதனைச் சந்திக்கத்தயார் என்று கூறினார். என்னைப் பொறுத்தவரை இவருக்கு எதிராக ஒருநீதிமன்றத் தீர்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய விடயத்திலான தீர்ப்பாளர்கள் 

மாநகர மக்களும் ஏனைய பொதுமக்களும் ஆவார்.இவரது குற்றச்சாட்டில் புஸ்பலதா என்பவரை நான் நியமித்ததாகவும்இ அவர்மூலமாக சில ஆவணங்களை மறைத்ததாகவும் கூறுகிறார். நான் 1989 ஆம்ஆண்டிலேயே சேவையிலிருந்து ஓய்வுபெற்றது பற்றி இந்த நாடே அறியும்.அவ்வாறு இருக்கையில் இவர் குறிப்பிடும் செல்வி பி.புஸ்பலதா என்பவர்

19.03.1999 ஆம் திகதியே நியமனம் பெற்றுள்ளார். நான் ஓய்வுபெற்று 10வருடங்களுக்குப் பின்பு நியமனம் பெற்றுள்ள ஒருவரை நான்நியமித்ததாகவும்இ ஆவணங்களை அவர் மூலமாக மறைத்ததாகவும் கூறுவதுஅபாண்டமான பொய்யாகும் என நான் வலியுறுத்த விரும்புகிறேன். இந்தத்தகவலை மாநகர ஆணையாளரிடமிருந்து எவரும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். 

இவர்களது கட்சியின் சிபார்சின் பேரிலேயே மாநகரபிரதேசத்திற்கு வெளியே வசித்த இவர் நியமனம் பெற்றதாக ஒரு தகவல்உண்டு.என்னைப் பொறுத்தவரையில் நான் சேவையிலிருந்து நீங்கிய 1988,89 காலப்பகுதியில் திடீரென சேவையில் இருந்து நீங்கினேன். அதேபோல 2006ஆம் ஆண்டிலும் ஒகஸ்ட் மாதம் அளவில் திடீரென 

ஏற்பட்ட சிறுநீரகப்பாதிப்பு காரணமாக சத்திர சிகிச்சைக்குட்பட்டுஇ வைத்தியசாலையில்இருக்கும் பொழுது என்னைப் பதவி நீக்கவேண்டும் என்று சிலர் அரசியல்காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசுக்கு முறையிட்டதைத் தொடர்ந்து மாநகரஅலுவலகத்துக்குச் செல்லலாமலேயே 

நான் பதவி நீங்கினேன். என்னுடையசேவைக் காலத்தில் எந்தவொரு ஆவணத்தைநானோ அல்லது வேறு நபர்கள்மூலமாகவோ மறைக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை. ஆகவேஇவர்களுடைய வாதமே பொய்யான அடிப்படையில் முன்வைக்கப்பட்டதுஎன்பது இதிலிருந்து தெரிய வருகிறது.திரு.றெமிடியஸ்  

எமது பகுதியிலே சிறந்த கிரிமினல் சட்டத்தரணிஎன்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே அந்த வகையிலான வாதத்தையேஇந்த சபையிலும் முன்வைத்திருக்கிறார்.அடுத்து இவர்களுக்குரிய பெரிய பிரச்சினையே கஸ்தூரியார் வீதியில்ஏற்கனவே அமைந்துள்ள ஆறு கடைகள் சம்பந்தமானது. 

இது சம்பந்தமாகஇவர்கள் காலத்துக்குக் காலம் என் மீது குற்றம்சாட்டி வருவதும் நான்பதிலளித்து வருவதுமாக இருந்துள்ளது. மாநகர சபையின் முதல்அமர்விலேயே இக்கடைகள் எனது தலைமையில் கட்டப்பட்டது என்று பொய்கூறினார். இதற்கு 14.06.2018 திகதி பதிலளித்து முதல்வருக்குக் கடிதம்எழுதினேன்.

கஸ்தூரியார் வீதிக்கு கிழக்குப் பக்கமாக உள்ள வண்ணான்குளத்திற்குஇடையில் உள்ள மாநகர சபைக் காணியை 1970களின் முற்பகுதியில்அப்போதைய முதல்வர் அல்பிரட் துரையப்பா அவர்கள் இந்தக் கடைகளைஅமைத்தவர்களுக்கு வழங்கியிருந்தார். அவ்வாறு காணியைப் பெற்றுக்கொண்டவர்கள் தங்களது செலவில் கடைகளை அமைத்து 

உப வாடகைக்குவழங்கி கணிசமான வருமானத்தைத் தாம் பெற்றுக் கொண்டு சபைக்குநிலவாடகையாக சிறுதொகையை செலுத்தி வந்தனர். துரையப்பாவின்இறப்புக்கு பின்பு 12.08.1975 இல் நான் ஆணையாளராக நியமிக்கப்பட்டேன்.அதிலிருந்து நான் சேவையிலிருந்து நீங்கும் வரையான காலம் ஒருஇக்கட்டான நெருக்கடியான காலமாகும். 

இந்த நிலக் குத்தகை என்பதுமாநகர சபை கட்டளைச் சட்டத்தின் பிரிவு 40 (1) (க)  இற்கு முரணானது.இந்த சட்ட ஏற்பாட்டின் படி மாநரக சபைக்கு உரித்தாக்கப்பட்ட எந்தகாணியையும் அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் அங்கீகாரம் இன்றிகுத்தகைக்கு வழங்கமுடியாது.2005 இல் நான் மாநகர ஆணையாளராக நியமனம் பெற்ற போது இந்தவிடயம் 

எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்பொழுது எமக்குஇரண்டு தெரிவு இருந்தது.ஒன்று மாநகர சபைக் கட்டளைச் சட்டத்தின் 42 ஏ பிரிவின் கீழ்இக்கடைகளை இடித்து அகற்றுதல்.அடுத்தது முறையற்ற விதத்தில் காணிகளைப் பெற்று கட்டடத்தை அமைத்துமேலும் முறையற்ற விதத்தில் உப வாடகைக்கு வழங்கப்பட்ட கடைகளைசபை 

உடைமையாக்கி இறுதியாக கடை நடத்தி வந்தவர்களே அவற்றைவிலை நிர்ணய திணைக்களத்தினால் நிர்ணயிக்கப்படும் வாடகைத்தொகையை செலுத்த உடன்படவும் அந்த நிர்ணயிக்கப்பட்ட மாதவாடகையின் பத்து வருடத்திற்குச் சமனான தொகையை பிறீமியமாக ஒரேதடவையில் செலுத்தவேண்டும் என்பது முறையாக்கல் ஆகும்.

இந்த இரண்டில் இரண்டாவது தெரிவே அமுல்படுத்தப்பட்டது. இந்தவிடயங்கள் யாவும் மாநகர வருமானப் பகுதி அலுவலகர்களாலேயேகையாளப்பட்டது மட்டுமன்றி சகல தீர்மானங்களும் பதவிநிலைஉத்தியோகத்தர்கள் யாவரும் கலந்து கொண்ட தீர்மானக் குழுக்கூட்டத்திலேயே முடிவு எடுக்கப்பட்டு அமுல்செய்யப்பட்டது.

திரு.றெமிடியஸ் அவரது வாதத்தின் போது கேள்விகள் கோரப்படாமலும்பணம் எதுவும் பெறப்படாமலும் இந்த முறையாக்கல் இடம்பெற்றதாகக்குற்றம் சாட்டியிருக்கிறார். முன்னாள் முதல்வருக்கு நான் எழுதிய 30.04.2011ஆம் திகதிய கடிதத்திலேயே தீர்மானக் கூட்ட அறிக்கையைப்பார்வையிடுமாறும் இது ஒரு முறையாக்கல் நடவடிக்கை 

என்பதையும்சுட்டிக்காட்டி இந்த ஆறு கடைகளையும் பெற்றவர்களிடமிருந்து சபைவருமானமாக 49 இலட்த்து 50 ஆயிரம் ரூபா தொகை அறவிடப்பட்டதுபற்றியும் தெரிவித்திருந்தேன். இவற்றை எல்லாம் பரிசீலிக்கும் வாய்ப்புஅவர்கள் பதவி விலகிய காலம் வரை மட்டுமல்ல அண்மையில்தற்போதைய சபை வந்த பின்பும் 

எல்லா ஆவணங்களையும் பார்வையிடும்வாய்ப்பு வசதிகள் இருந்தும் இவ்வாறு திட்டமிட்ட குற்றச்சாட்டுமுன்வைக்கப்படுகிறது.இதற்கான காரணம் புரிந்துகொள்ளக்கூடியதுதான். இந்த ஆறுகடைக்காரர்களும் இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படும் பொழுது தமக்குமுன்னுரிமை தரவேண்டும் என்று வாதாடியதும் அதற்கு யாழ்ப்பாணவணிகர் கழகம் 

ஆதரவு தெரிவித்தமையும் அதனால் இவர்களின்ஆறுகடைகளை வேறு நபர்களுக்கு வழங்கி கோடிக் கணக்கான ரூபாக்களைத்தாம் பெற்றுக் கொள்ள முடியாமல் போனமையே காரணமாகும்.கட்டடம் சம்பந்தமாக என்னால் யாழ்ப்பாண நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்ட வழக்கு இலக்கம் 1443. 2011 விசாரணைக்கு எடுக்கப்பட்ட கடைசிநாளில் 

எமது சட்டத்தரணி வெளிநாடு சென்றிருந்தமையினால்சமூகமளிக்கப்பட முடியாமை பற்றி நானே நேரடியாக நீதிபதியின்கவனத்திற்குக் கொண்டு வந்து வேறொரு தவணை வழங்குமாறு கோரினேன்.ஆனால் அந்தக் கோரிக்கையை நிராகரித்து இந்த வழக்கை விசாரணைஎதுவுமின்றி நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். 

அன்றைய தினம் மேல்நீதிமன்ற நீதிபதியாக இருந்த விக்னராஜா அவர்களும் ஆளுநர் சார்பாகசட்டத்தரணியாக ஆஜராகியிருந்தார்.இந்த வழக்கில் எனது சட்டத்தரணியின் புரொக்ஸியை மாற்றி அமைக்கும்உரிமை கொண்ட நான் தவணை கேட்டும் எனது புரொக்ஸி வராதாகாரணத்தைக் காட்டி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தது 

அடிப்படைநீதியியலுக்கு மாறானது என்றும் இவ்வாறான தீர்ப்புகளினால் மக்கள்நீதித்துறையில் அவநம்பிக்கை கொள்ள சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன என்றுதிரு விக்னராஜாவிடம் நான் கூறியதும் எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது.நான் ஒப்பந்தங்களில் ஒப்பமிட்டது தவறென்று திரு.றெமிடியஸ் லாவகமாகதனக்கே 

உரிய பாணியில் வாதத்தை முன்வைத்தார்.நான் எந்த முதல்வர் சார்பிலும் எந்த இடத்திலும் ஒப்பமிடமில்லை என்பதைஅவரே ஒரு கட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு நியமமான படிவத்தில்பொருத்தமற்ற விடயங்களை கீறிவிடுவது வழமை. மேலும் மாநகர சபைகட்டளைச் சட்டத்தின் 286 ஏ பிரிவின் கீழ் மேயர் ஒருவர் பதவி வகிக்காதநிலையில் 

மாநகர ஆணையாளர் சபையினதும் முதல்வரதும் பிரதிமுதல்வரதும் அதிகாரங்களைப் பிரயோகிக்கலாம். ஆகவே எம்மால்மேற்கொள்ளப்பட்ட எல்லா நடவடிக்கைகளும் சட்டபூர்வமானவை என்பதைவலியுறுத்த விரும்புகிறேன்.இவ்வாறு நான் ஒப்பமிட்டது தவறு என்று இவர் கூறுகையில்

மாநகரஆணையாளராக இருந்த பிரணவநாதன் முதலமைச்சருக்குத் தெளிவுபடுத்தல்கோரி கடிதம் அனுப்பியது தேவைற்றது என்று பட்டியல் உறுப்பினர் திருமதியோகேஸ்வரி சற்குணராஜா கூறுகிறார். இவர்கள் இருவருமேசந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசியிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.விசாரணை குழு அமைத்தலுக்கு முதலமைச்சருக்கு 

அதிகாரம் இல்லைஎன்ற வாதத்தை இவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். 1989 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க மாகாண சபை திருத்தச் சட்டத்தின் மூலம் மத்திய உள்ளூராட்சிஅமைச்சரின் அதிகாரங்கள் யாவற்றையும் மாகாண உள்ளூராட்சி அமைச்சர்பிரயோகிக்க முடியும் என்றுள்ளது. எனவே அரசியலமைப்பு மூலம் மாகாணசபைகளுக்கு 

உரித்தாக்கப்பட்ட அதிகாரங்கள் அடிப்படையில் மாநகர சபைகட்டளைச் சட்டத்தின் மத்திய கட்டுப்பாடு ஏற்பாடுகளுக்கு அமையகுழுக்களை நியமிக்கவும்இ விசாரணை செய்யவும் உள்ளூராட்சி அமைச்சர்என்ற வகையில் முதலமைச்சருக்கு முழு அதிகாரமும் இருந்தது.விசாரணை அறிக்கைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றதீர்மானம் மாகாண சபையிலேயே வலியுறுத்தப்பட்டதன் 

அடிப்படையிலேயே எனது தலைமையில் ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.இந்தக் குழு பற்றி யாழ். மாநகர சபையில் பேசப்படுகின்ற எல்லாச் சந்தர்ப்பத்திலும் ஏதோ எனது தனி அறிக்கை போல அங்கு பேசப்பட்டமைஇவர்களது காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு ஆகும்.இந்த கட்டட அமைப்புக்கான விண்ணப்பங்களை கோருகின்றபோது 

தனிஒருவர் மட்டும் விண்ணப்பித்த பொழுது மீள் விண்ணப்பங்கள் கோரப்படவேண்டும் என்ற வாதம் சபையில் முன்வைக்கப்பட்ட போது தாங்கள் ஏதோபெரிய தமிழ் தேசிய வாதிகள் போன்று காட்டி தமிழருக்கு கொடுப்பதே தமது கொள்கையாகும் என்று உரத்துக் கூறினர். இது ஒரு வேடிக்கையான கூற்று.இவர்கள் வெளியிட்ட விளம்பரங்கள் 

தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகியமொழிகளில் தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில்மட்டுமே வெளியிடப்பட்டன. தமிழருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்றால் ஏன் சிங்களப் பத்திரிகையில் வெளியிட வேண்டும். மேலும் இந்தத் தகவல் ஏன் உள்ளூர் பத்திரிகையில்வெளியிடவில்லை என்ற கேள்வியும் எழுகின்றது.

குறிப்பாக இந்த விடயத்தில் மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் 212 ஆவதுபிரிவின் ஏற்பாடுகளின் படி வரவு செலவுத் திட்ட அறிவித்தல் மாநகர பிரதேசத்தில் விநியோகிக்கப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டபத்திரிகைகளில் அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும்என்றுகூறப்பட்டிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்து மிக முக்கியமாக இந்த முதலீட்டாளர் தம்மை 03.10.2010 முதலில்சந்தித்துப் சேியதாக திருமதி பற்குணராஜா குறிப்பிடுகின்றார். இதனைத்தொடர்ந்தே எல்லா நடவடிக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன என்பதுதெளிவு.இந்த சிபார்சு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 45 மில்லியன் நிலையானவைப்பு என்று சபையின் கணக்காளரால் 

தரப்பட்ட தரவு. இதில் குறிப்பிட்டதேவைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் உள்ளடக்கப்படவில்லை.45 மில்லியனை வீதி அபிவிருத்திக்குச் செலவழித்தாகக் கூறுகின்றனர். இதுபொய்யான தகவல் ஆகும். உண்மையில் அங்கீகரிக்கப்பட்ட ஆளணிக்கு மேலாக 430 பேரை நியமனம் செய்து மாதாந்தம் ரூபா ஆறு மில்லியன் வரைசெலவு செய்து

வருடாந்தம் 72 மில்லியனாக இருப்பது பற்றி 25.04.2011 ஆம்திகதி ஆளுநர் சந்திரசிறி அவர்களுக்கு நாம் எழுதியிருப்பதும் சுட்டிக்காட்டப்படக் கூடியது. மிக மோசமான விடயமாக முழுச் சபையையும் உதாசீனம் செய்து முழு அதிகாரத்தையும் மாநகர முதல்வராகிய தனக்கே வழங்கவேண்டும் என்ற பிரேரணையை தானே முன்மொழிந்து

மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் 28ஆம் பிரிவு 32 ஆம் பிரிவு என்பனவற்றை மீறும் செயலாகும். எனவே இந்த அதிகாரக் கையளிப்பு சட்டத்திற்கு முரணனானது என்பதும் விசாரணைக் குழுக்களால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. சட்டபூர்வ அதிகாரம்இல்லாத ஒருவரால் கையொப்பம் இட்ட ஒப்பந்தம் 

இயல்பாகசட்டவலுவற்றது என்பது சகல விசாரணைகளதும் முடிவாகும்.மேலும் மாநகர சபை சட்டத்தின் 229 ஆவது பிரிவின் கீழ் கோரப்படுகின்றஎல்லாக் கேள்விக் கோரிக்கைளும் சபையின் அங்கீகாரத்துக்காகசமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு செய்யப்படவில்லை.மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் 

28 ஆம் பிரிவின் அடிப்படையில் நிதிசார்ந்த விடயங்கள் நிதிக்குழு ஊடாக சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றுஇருக்கையில் இந்த ஏற்பாடு சபையின் நிதி அல்லது அரசு நிதிக்கு மட்டும்பொருந்தும் என்ற இவர்களது வாதம் தவறானது. அப்படி எதுவும் இந்தஏற்பாட்டில் இல்லை.இந்த விடயத்தில் அரச கணக்காய்வுத் திணைக்களம் 

யாழ்ப்பாண மாநகரமுதல்வருக்கு எழுதிய 2017 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் அதன் பந்தி 4:3சர்ச்சைக்குரிய தன்மையிலான கொடுக்கல் வாங்கல் என்ற தலைப்பில் இந்தவிடயம் பற்றி கேள்வி எழுப்பி சபையின் அனுமதியின்றி சபைக்குஉரித்தான 7.29 பரப்பு விஸ்திரணமுடைய வண்ணான்குளம் காணி ஒன்றுஒப்பந்தக்காரர் ஒருவருக்கு 

வழங்கப்பட்டமை தொடர்பில் கேள்விஎழுப்பியுள்ளது.இதேபோல 2017ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபைக்கான கணக்காய்வுஅறிக்கையின் பந்தி 6:10:5 (பி) பந்தியிலும் இந்த விடயம் தொடர்பாக கேள்விஎழுப்பப்பட்டுள்ளது என்பது முக்கியமாகும்.கஸ்தூரியார் வீதி ஆறு கடைகளை நான் முறையாக்கியதை தவறு என்றுகூறி சபையை தவறாக தொடர்ந்து

 வழிநடாத்தி விடயத்தை திசை திருப்பமுற்பட்டு உள்ளனர்.அதேநேரம் என்னுடைய செயற்பாடுகள் தவறானதாக இருக்குமானால்கணக்காய்வுத் திணைக்களம் கேள்வி எழுப்பியிருக்கும். அவ்வாறு எதுவும்நிகழவில்லை.காலத்திற்குக் காலம் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தமது பல்வேறுமோசடிகளையும் ஊழல்களையும் 

மறைப்பதற்கே என் மீது அபாண்டமானகுற்றச்சாட்டுக்களைச் சாட்டி வருவதும் அனைவருக்கும் தெரிந்ததே. திருறெமிடியசும் அதற்கு வக்காலத்து வாங்குவது வழக்கமானதே. எமது இந்தத்தெளிவுபடுத்தல் மூலம் மக்கள் உண்மை நிலையை தெரிந்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு