ஆகஸ்ட் 15 திகதிக்கு முன் மாகாணசபைகள் தேர்தலை நடத்தலாம்..
மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் இந்த வருடத் தின் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக இடம் பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளது.
மேற்கண்டவாறு தேர்தல் ஆணையக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன, மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமை தொடர்பில் பல விமர்சனங்கள்
முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்களைக் கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தன.
இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வில்லையாயின், மாகாணசபை முறைமை நாட்டில் இருக்கத் தேவையில்லை.
ஆயுள் காலம் முடிவடைந்த 6 மாகாணசபைகளுக் கான தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படு கின்றன.
தேர்தல்கள் ஆணைக்குழு 9 மாகாணசபைகளுக்கு மான தேர்தலை ஒரே நாளில் நடத்தத் தயாராக இருக்கின்றது.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட எல்லோரும்
மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தத் தயார் என்று கூறுகின்றார்கள். ஆனால் மாகாணசபைத் தேர்தல் நடத்தமுடியவில்லை. தூங்குபவர்களை எழுப்ப லாம்.
ஆனால் தூங்குபவர்கள் போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாது. மாகாணசபைத் தேர்தல்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர்
நடத்த முடியும் என்று எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.