தமிழா்களுக்கு மரணச் சான்றிதழும், பணமும் கொடுக்கலாம். இராணுவத்திற்கு பொதுமன்னிப்பு கொடுங்கள். சம்பிக்க கூறுகிறாா்..

ஆசிரியர் - Editor I
தமிழா்களுக்கு மரணச் சான்றிதழும், பணமும் கொடுக்கலாம். இராணுவத்திற்கு பொதுமன்னிப்பு கொடுங்கள். சம்பிக்க கூறுகிறாா்..

போா் குற்றங்களை செய்தவா்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரும் வகை யில் அமைச்சா் சபை பத்திரம் ஒன்றினை தாம் தாக்கல் செய்துள்ளதாக நகர அபிவிருத்தி அமை ச்சா் சம்பிக்க ரணவக்க கூறியிருக்கின்றாா். 

விடுதலைப் புலிகள் மற்றும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றச்செயல்களுக்கு மன் னிப்பு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு ள்ளது.

இலங்கை அரச படையினர் மட்டும் போர் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என குற்றம் சுமத்து வது பொருத்தமற்றது எனவும், வேறு தரப்பினர்களும் போர் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டி ருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தி ல் இணைக்கப்பட்ட 12,000 முன்னாள் போராளிகளுக்கும் போர் குற்றச்செயல் அடிப்படையில் த ண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

போர் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரித்து சட்ட நடவடிக்கை எடுப்பது என்பது முடிவில்லா ஓர் நடவடிக்கையாகவே அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணாம ல்போனவர்கள் தொடர்பில் காணவில்லை என்ற அடிப்படையிலான 

ஓர் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் எனவும், அதனை அவர்களது உறவினர்கள் சட்ட தேவைக ளுக்காக பயன்படுத்தி கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போரின் போது பாதிப் புக்களை எதிர்நோக்கிய நபர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமெனவும், 

கொல்லப்பட்ட போராளிகள் தவிர்ந்த ஏனைய அனைவருக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமெ னவும் தெரிவித்துள்ளார். இராணுவ தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் காணிகள் உரிமையா ளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் அல்லது உரிய நட்டஈட்டை வழங்கி 

கிரமமான முறையில் காணிகள் கையகப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தி யுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவில் போர் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதா கவும், 9000 பேரை அவர்கள் கொன்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியிருக்கக்கூடாது என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பிரச்சினை தொடர்ந்தும் சர்வதேசத்தின் கண்காணிப்பில் கீழ் இருக்கக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாளத்திற்கு ஆடாமல் இருந்திருந் தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கொலை 

செய்திருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு