போராட்டத்திற்குள் நுழைந்து குழப்பம் விளைவித்தவா்கள், நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரனின் சகாக்களா..? பின்னணி என்ன..?

ஆசிரியர் - Editor I
போராட்டத்திற்குள் நுழைந்து குழப்பம் விளைவித்தவா்கள், நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரனின் சகாக்களா..? பின்னணி என்ன..?

கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் குழப்பத்தில் ஈடுபட்ட கறுப்பு சட்டை அணிந்தோர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,  வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுடன் கூடி கதைக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நேற்றைய தினம் கிளிநொச்சியில் போராட்டம் நடத்தப்பட்டது. குறித்த போராட்டத்தில் கறுப்பு சட்டை அணிந்து வந்த சிலர் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், யாழ்.பல்கலைகழக மாணவர் ஒருவர் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், ஒலிபெருக்கி சாதனத்தின் வயர்களை பிடுங்கி எறிந்தும், 

ஊடகவியலாளர்கள் , போராட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் அச்சுறுத்தியும் இருந்தனர். அவ்வாறாக குழப்பத்தில் ஈடுபட்ட நபர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர்கள் எனவும், இவ்வாறே தமது போராட்டங்களில் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றார்கள் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்கள் கவலை தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய கறுப்பு சட்டை அணிந்த நபர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 

அதேவேளை போராட்டத்தில் குழப்பங்களை ஏற்படுத்த முதலே அக் கலந்துரையாடல் நடந்தப்பட்டதாகவும், அதன் பின்னரே குறித்த நபர்கள் குழப்பத்தில் ஈடுபட்டதாகவும் கருத்துக்களும் பகிரப்பட்டு வருகின்றன. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு