SuperTopAds

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் நடாத்திய போராட்டத்தில், கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் அடிதடி, திட்டி வெளியேற்றிய மக்கள்..

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் நடாத்திய போராட்டத்தில், கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் அடிதடி, திட்டி வெளியேற்றிய மக்கள்..

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் போராட்டத்திற்கு ஆதரவு தொிவிப்பதாக கூறி போராட்டத்தி ற்கு வந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் இரண்டுக்கிடையில் முறுகல் நிலை உருவாகி அது அடிதடியில் முடிந்த நிலையில், 

அதனை பொறுத்துக் கொள்ள முடியாத காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களால் அடி தடியில் ஈடுபட்டிருந்த அரசியல் கட்சியின் ஆதரவாளா்களை காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கடுமையாக திட்டி வெளியேற்றினா். 

ஐக்கிய நாடுகள் சபையே குற்றவாளிகளிடமே நீதியை பெறுங்கள் என கூறுவதுமுறையா? 10 வருடங்கள் நீதியை வழங்காத குற்றவாளிகளுக்கு கால அவகாசம்வழங்குவது முறையா?   என்ற கேள்விகளுடன் வடமாகாணம் முழுவதும் 

ஹர்த்தால்அனுட்டிக்கப்பட்ட நிலையில்யாழ்ப்பாணம்கண்டி வீதியை  முடக்கி காணாமல்   ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பாரிய போராட்டம் ஒன்றை கிளிநொச்சியில்நேற்று திங்கட்கிழமை நடத்தினர்.

இப் போராட்டத்திற்கு பல அமைப்புக்கள் மற்றும் பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தது மட்டுமல்லாமல் போராட்டத்திலும் பங்கு கொண்டிருந்தனர். இதற்கமைய  ஆயிரக்கணக்கான மக்கள் போராடத்தில் கலந்து கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  ஏ9 வீதியூடாக பேரணியாகச் சென்ற போது போராட்டத்தில் தங்களை முன்னிலைப்படுத்துவது யார் என்பதில் அரசியல்கட்சிகளின் உறுப்பினர்களிடையே குடுமி பிடி சண்டையும், முரண்பாடுகளும் காணப்பட்டுருந்தன. 

இதற்கமைய கூட்டமைப்பின் பங்களிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் யாழ்ப்பாண உள்ளூராட்சி சபையொன்றின் உறுப்பினர் ஒருவரை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி உள்ளூராட்சி சபையொன்றின் உறுப்பினரும் அவரது ஆதரவாளர்களும் தாக்கியுள்ளனர்.

இதனால்  அந்த போராட்டத்தில் சில நிமிடங்கள் குழப்பம் ஏற்பட்டிருந்தது போதும் தொடர்ந்தும் பேரணியாக சென்றனர். ஆயினும் சில மணி நேரங்களின் பின்னர் போராட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மேற்படி இரண்டு கட்சியினரும் 

அந்த இடத்திலே தங்களது ஆதரவாளர்கள் சகிதம்முரண்பாட்டுக் கொண்டுருந்தனர்இதனைத் பார்த்த மதகுருமார்கள் இங்கு சண்டை பிடிக்க வேண்டாம் கலைந்துசெல்லுங்கள் எனக் கேட்டிருந்தனர்

அதே நேரம் அங்கு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டஉறவினர்களும் பொது மக்களும் ஏளனமாகப் பார்த்தது மட்டுமல்லாமல் ஒரேகட்சிக்காரர்கள் இங்கு எதற்காக சண்டை பிடிக்கின்றீர்கள் எனக் கேட்டதுடன் 

இந்தஇடத்தில் சண்டை பிடிக்காமல் இங்கிருந்து அகன்று செல்லுங்கள் எனக்கோரினர். இதனையடுத்து இரண்டு கட்சியினரும் அங்கிருந்து கலைந்துசென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.