OMP என்றால் என்னவென்றே தொியாமல். அரசியல் சுயலாபத்துக்காக கலகம் விளைவித்த அரசியல் காவாலிகள்..
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கு "OMP ' வேண்டாம் என கோசங்களை எழுப்பிய வேளை . "OMP" வேண்டும் என தமிழ் அரசியல் கட்சியை சார்ந்த சிலர்
கோஷங்களை எழுப்பினார்கள். அதன் போது , போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "OMP" வேண்டாம் என கூறிய போது ,
தமது பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் விவாதித்து கிளிநொச்சியில் அலுவலகம் திறக்க முற்படுகின்றார்.
நீங்கள் வேண்டாம் என கோஷம் போட வேண்டாம் என கூறினார்கள். அதனை பாதிக்கப்பட்ட உறவுகள் ஏற்காது அவர்களை "OMP வேண்டும் என கோஷம் போட விடாது தடுத்தனர்.
பின்னர் மக்கள் அங்கிருந்து ஐநா அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற போதும் மக்கள் கைகளில் ஏந்தி வந்த பதாகைகளை மறைத்தவாறு
கோசங்களை எழுப்பி போராட்டத்தினை குழப்பும் விதமாக செயற்பட்டுக்கொண்டு இருந்தனர்.