SuperTopAds

மஹிந்தவை தமிழ் மக்கள் ஆதாித்ததில்லை, கூட்டமைப்பின் தலைவா் வாய்ப்பை தவறவிட்டுள்ளாா்..

ஆசிரியர் - Editor I
மஹிந்தவை தமிழ் மக்கள் ஆதாித்ததில்லை, கூட்டமைப்பின் தலைவா் வாய்ப்பை தவறவிட்டுள்ளாா்..

தமிழ் மக்கள் எக்காலத்திலும் மஹிந்த ராஜபக்ஸவை ஆதாித்தது கிடையாது. என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் த.சித்தாா்த்தன், பிரதமா் ரணில் விக்கிர ம சிங்கவிடமிருந்து எழுத்துமூல உத்தரவாதத்தை பெற கூட்டமைப்பு தவறியுள்ளதாகவும் சுட்டிக் காட்டியிருக்கின்றாா். 

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை காரியாலயம் இன் று மட்டக்களப்பு, பூம்புகாரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கரு த்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை 

மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுத்தமையே ரணில் விக்ரமசிங்கவிற்கு தமிழ் தேசிய கூட் டமைப்பு ஆதரவு வழங்கியதற்கான முக்கிய காரணம். கடந்த கால பல தேர்தல்களில் மகிந்த ரா ஜபக்ஸ ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே தமிழ் மக்கள் சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு வாக்களித்ததாகவும் 

ஆனால் அவர்கள் மீது எந்த நம்பிக்கையினையும் கொண்டு வாக்களிக்கவில்லை. தமிழ் மக்க ளுக்கு தீர்வொன்றினை பெற்று கொடுக்க வேண்டுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்று மையாக செயற்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இருப்பதன் காரணமாகவே 

நாடாளுமன்றத்தில் பலமான சக்தியாகவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எழுத்துமூலமான உறுதிமொழி வழங்குவதாக தெரிவித்த போதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அதனை பின்னர் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.

இதன்போது வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டன. மேலும், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.துரைரெட்னம், வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் லிங்கநாதன் ஆகியோர் இதன்போது உரையாற்றி யுள்ளனர்.