தலைவா் பிரபாகரனுடன் ஜனாதிபதி மைத்திாியை ஒப்பிட்ட பிரதமா் ரணில், பிரபாகரனுக்கு அஞ்சியதுபோல் ஜனாதிபதிக்கும் அஞ்சுகிறாா்..
19வது திருத்தச்சட்டத்தையும் அதன் ஊடாக உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களையும் கலைப்பதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால் நான் அவ்வாறு செய்தால் பிரபாகரன் செ ய்தது மீண்டும் நாட்டில் நடக்கும், சிங்கள பிரபாகரனுடன் இணைந்து பணியாற்ற முடியாது.
மேற்கண்டவாறு பிரதமா் ரணில் விக்கிரம சிங்க கூறியுள்ளாா். திருகோணமலைக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் பங் கேற்றிருந்தார். அங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அரசமைப்புப் பேரவை தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக பல் வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருகின்றார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரணி ல் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவித்துள்ளார்.
’19ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து ஜனநாயகத்தை நிலைநாட்டினோம். சுயாதீனக் குழுக்களை உருவாக்கினோம். தங்களுடைய சுய அரசியல் லாபத்துக்காக அதனை விமர்சிக் கின்றனர். 2015ஆம் ஆண்டு நாட்டை இருண்ட யுகத்திலிருந்து மீட்டெடுத்தோம்.
அதனைக் குலைக்க இப்போது பலர் கிளம்பியுள்ளார்கள். நான் 19ஆவது திருத்தச் சட்டத்தையும், அதன் ஊடாக உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களையும் கலைக்கத் தயாராக இருக் கின்றேன். அப்படிச் செய்தால் நாட்டில் என்ன நடக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.
வடக்கில் பிரபாகரன் ஆயுதத்தை வைத்து என்ன செய்தாரோ அதுவே நாட்டில் நடக்கும். எங்க ளுக்கு சிங்கள பிரபாகரனுடன் இணைந்து பணியாற்றவேண்டிய அவசியமில்லை’ என்று ரணில் குறிப்பிட்டார்.