காரைநகர் ஜே-42 பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்..

ஆசிரியர் - Editor I
காரைநகர் ஜே-42 பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்..

காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஜே-42 கிராம சேவையாளர் பிரவில் இன்று (22) வெள்ளிக்கிழமை டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் ப.நந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்தச் செயற்பாட்டில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், 

குடும்பநல சுகாதார மாதுக்கள் போன்றோரும் பங்கெடுத்தனர். முன்னதாக, டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னிட்டு இன்று காலை 

காரைநகர் சுந்தரமூர்த்தி வித்தியாலையில் சிரமதானம் இடம்பெற்றது. பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிரதேச மக்களும் இணைந்து 

பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்தனர். தொடர்ந்து வீட்டுத் தரிசிப்பு இடம்பெற்றது. பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கிராம சேவையாளர், 

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், குடும்பநல சுகாதார மாதுக்கள் போன்றோர் பல அணிகளாகப் பிரிந்து வீடுகளுக்கு நேரடியாகச் 

சென்று டெங்கு தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டினர். இதன்போது, பற்றைக் காணிகள், ஆட்களற்ற நிலையில் பற்றைகள் வளர்ந்துள்ள வீட்டுக் காணிகள்

போன்றவற்றுக்கு சிவப்பு எச்சரிக்கை பிரசுரம் ஒட்டப்பட்டது. ஏழு நாள்களுக்குள் அவற்றைச் சுத்தம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்புகள் மற்றும் மயிர்கொட்டிகளின் தாக்கம் அதிகரிக்கும் எனக் அடையாளம் காணப்பட்ட காணிகளையும் உடனடியாக துப்புரவு செய்யுமாறு 

காணி உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு