நாட்டு மக்களை பயங்கரவாதிகளாக சித்தாிக்காதே..! வீதியில் இறங்கி பெண்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களை பயங்கரவாதிகளாக சித்தாிக்காதே..! வீதியில் இறங்கி பெண்கள் போராட்டம்..

இலங்கையில் பயங்கரவாதம் இல்லை. என அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில் எதற்காக இன்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறையில் வைத்திருக்கவேண்டும்? என கேட்டு கிளிநொச்சியில் பெண்கள் இன்று கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனா். 

கிளிநொச்சி யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மக்கள் சிலர் இணைந்து இன்று கிளிநாச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. நாட்டில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தையும் கண்டித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மக்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநாச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஏ9 வீதியால் டிப்போ சந்திவரை சென்றடைந்தது.

போராட்டத்தல் கலந்துகொண்டவர்கள் அரசே பீாிஏ யின் ஊடாக பெண்களின் உரிமைகளை பறிக்காதே நாட்டு மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்காதே பெண்களின் விடுதலையே நாட்டின் விடுதலை. 

சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் பொறியே பயங்கரவாத தடைச்சட்டம் மக்களின் பிரதிநிதிகளே பிரிஏ இசிரிஏ பற்றி மக்களிடம் கேளுங்கள் என கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு