பாதாள உலக குற்றவாளிகள் போலிக் கடவுச்சீட்டுகள் வழங்கிய குடிவரவு உதவிக் கட்டுப்பாட்டாளர் கைது!

பாதாள உலகக் குற்றவாளியான மன்தினு பத்மசிறி எனப்படும் 'கெஹெல்பத்தர பத்மே'வுக்கு மூன்று போலி கடவுச்சீட்டுகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
உதவி கட்டுப்பாட்டாளர் அனுர சம்பத் பண்டாரவை மே 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல திங்கட்கிழமை (27) அன்று உத்தரவிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டு பெப்ரவரியில் கொழும்பில் உள்ள நீதிமன்றத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 'கெஹல்பத்தர பத்மே'வுக்கு கடவுச்சீட்டுக்களை வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
துபாயில் இருக்கும் 'கெஹல்பத்தர பத்மே' என்பவருக்காகப் போலி கடவுச்சீட்டைத் தயாரித்த குற்றச்சாட்டில் முன்னர் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.