SuperTopAds

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறும் கருத்து எதேச்சதிகாரமிக்கது

ஆசிரியர் - Editor II
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறும் கருத்து எதேச்சதிகாரமிக்கது

மிகப்பெரும் இனப்படுகொலை  இலங்கையில் இடம்பெற்றது. அதற்கு போதியளவு ஆதாரமும் இருக்கின்றது. இதை அனுர அரசு இல்லை என கூற முனைவதை ஏற்க முடியாது என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாசன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலையே இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

கனடாவில் அமைக்கப்படுள்ள இனப்படுகொலை நினைவுத் தூபி தமிழ் மக்களுக்கான நீதிகோரலுக்கான உலகின் அங்கீகாரமாகும். 

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  கூறும் கருத்து எதேச்சதிகாரமிக்கது.

அத்துடன் முள்ளிவாய்க்கால் அழிவுகள் இராணுவத்தின் மீது வீண்பழி சுமத்தும் செயல் எனவும், முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறியதையும் ஏற்க முடியாது.

யுத்தத்தில் வலிந்து காணாமலாக்கப்படுவது என்பதும் இனப்படுகொலைதான்.வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை கொன்று குவித்தார்கள். இவை எல்லாம் என்ன? இன அழிப்பில்லையா? இது ஆதாரம் இல்லையா?

மோசமான பொறிமுறைகளை கையாண்டு தமிழ் மக்களின் அரசியல் இருப்பையும் இல்லாது செய்கின்றது. 

இதை நாம் ஏற்க முடியாது. இதற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.