SuperTopAds

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் ஒன்றிணைந்து மாபெரும் எதிா்ப்பு போராட்டத்திற்கு திட்டம்..

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் ஒன்றிணைந்து மாபெரும் எதிா்ப்பு போராட்டத்திற்கு திட்டம்..

வடகிழக்கு மாகாணங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ஒன்றிணைந் து பாாிய எதிா்ப்பு போராட்டம் ஒன்றை எதிா்வரும் 25ம் திகதி கிளிநொச்சியில் நடாத்துவதற்கு தி ட்டமிட்டுள்ளனா். 

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மதத்தலைவர்கள், அரசியற்கட்சிகளின் பிரதிநிதிகள் நிறுவனம் சார்ந்த பிரதிநிதிகள் பொது அமைப்புக்கள் அனைவரும் ஒன்றுகூடி இலங்கை அரசுக்கும், 

ஐக்கிய நாடுகள் சபைக்கும் மற்றும் சர்வதேச சமூகத்திடமும், தமது உறவுகளுக்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரியே இக் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர். அதனை த்தொடர்ந்து மாபெரும் பேரணி ஏ – 9 வீதி ஊடாக நகர்ந்து 

டிப்போசந்தியை அடைந்து இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளிடம் மகஐர் கையளிக்கப்படும் எனவும் இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வடபகுதியில் பூரண கதவடைப்புடன் கூடிய கர்த்தலை அனுஷ்டிப்பதற்கு 

முழுமையான உணர்வுபூர்வமான பங்களிப்பினை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் கோரியுள்ளது.