வாட்ஸ்அப் செயலியில் தாணியங்கி நடவடிக்கைகளை கண்டறியும் தொழில்நுட்பம்!

ஆசிரியர் - Admin
வாட்ஸ்அப் செயலியில் தாணியங்கி நடவடிக்கைகளை கண்டறியும் தொழில்நுட்பம்!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை எவ்வாறு தடுக்கிறது என்பதை தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் செயலியினுள் மெஷின் லேர்னிங் எனும் அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்கி இருப்பதாக அறிவித்துள்ளது. 

இந்த தொழில்நுட்பம் வழக்கத்தை விட அதிகளவு குறுந்தகவல்களை அனுப்புவோர் மற்றும் பல்வேறு அக்கவுண்ட்களை உருவாக்கி தீங்கு விளைவிக்கும் போலி தகவல்களை பரப்புவோரை கண்டறியும். இதுபோன்ற அக்கவுண்ட்களை செயலி முழுக்க வெவ்வேறு தளங்களில் முடக்குவதாக வாட்ஸ்அப் உறுதியளித்துள்ளது. 

அந்த வகையில் போலி தகவல்களை பரப்புவதற்கென உருவாக்கப்படும் அக்கவுண்ட்கள் பதிவு செய்யப்படும் போது, குறுந்தகவல் அனுப்பும் போது அல்லது மற்றவர்கள் புகார் எழுப்பும் போது என பல்வேறு தளங்களில் முடக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் வாட்ஸ்அப் செயலியில் சுமார் இருபது லட்சம் அக்கவுண்ட்கள் இவ்வாறு முடக்கப்படுவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் உருவாக்கி இருக்கும் மெஷின் லேர்னிங் மென்பொருளால் தற்சமயம் 20% அக்கவுண்ட்களை பதிவு செய்யப்படும் போதே முடக்கமுடிகிறது. அக்கவுண்ட்களை முடக்க பயனரின் ஐ.பி. முகவரி, அவர் வசிக்கும் நாடு, அவர்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பர், அக்கவுண்ட் எவ்வளவு பழையதாக இருக்கிறது என பல்வேறு விவரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

ஒரே ஸ்மார்ட்போனில் பல்வேறு வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பயன்படுத்த அனுமதிக்கும் விசேஷ மென்பொருள் உள்பட செயலியை தவறாக பயன்படுத்த அனுமதிக்கும் பல்வேறு வழிகளை வாட்ஸ்அப் கண்டறிந்துள்ளது. வாட்ஸ்அப் செயலியில் வியாபாரங்களை கண்கானிக்க பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

போலி தகவல்கள் பரப்பப்படுவதை கண்காணிக்க பயனர் ஒரு குறுந்தகவலை மற்றவருக்கு ஃபார்வேர்டு செய்யும் எண்ணிக்கையை குறைத்துள்ளது. இதுதவிர ரேடியோ, தொலைகாட்சி, வலைதளம் உள்ளிட்டவற்றில் போலி செய்திகள் பரப்புவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விளம்பரங்களை வாட்ஸ்அப் வெளியிடுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு