SuperTopAds

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 542 குடும்பங்களுக்கு வீடு, உறுதியளித்தபடி செய்கிறதா அரசு?

ஆசிரியர் - Editor I
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 542 குடும்பங்களுக்கு வீடு, உறுதியளித்தபடி செய்கிறதா அரசு?

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற வெள்ளம் அனர்த்தம் காரண மாக பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவின் 542 குடும்பங்களுக்கான வீட்டுத்தி ட்டம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்படவுள்ளது.

இவர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் இ டம்பெற்றது. ஒட்டுசுட்டான் உதவி பிரதேச செயலாளர் இ ரமேஸ் தலைமையில் இன்று காலை ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற 

கலந்துரையாடல் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முல்லைத்தீவு மாவட்ட முகாமையாளர் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் கிராம அலுவலர்கள் அபிவிருத்தி உத்தியோ கத்தர்கள் பயனாளிகள் உள்ளிட்டவர்களுக்கிடையில் இடம்பெற்றது.

இவர்களுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வீட்டுத்திட்டத்துக்கான வேலைகளை ஆரம்பிக் குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு இவர்களுக்கான முதல் கட்ட கொடுப்பனவும் வழங்கப்பட் டுள்ளது. இதனடிப்படையில் பெரியஇத்திமடு கிராம அலுவலர் பிரிவில் 

4 வீடுகளும் கூழாமுறிப்பு கிராம அலுவலர் பிரிவில் 13 வீடுகளும் கனகரத்தினபுரம் கிராம அலுவலர் பிரிவில் 14 வீடுகளும் பேராறு கிராம அலுவலர் பிரிவில் 15 வீடுகளும் பண்டாரவன்னி கிராம அலுவலர் பிரிவில் 14  வீடுகளும் கருவேலன்கண்டல் 

கிராம அலுவலர் பிரிவில் வீடுகளும் தண்டுவான் கிராம அலுவலர் பிரிவில் வீடுகளும் காதலியார் சமணங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 41 வீடுகளும் புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 10 வீடுகளும் கணேசபுரம் கிராம அலுவலர் பிரிவில் 

13 வீடுகளும் ஒட்டுசுட்டான் கிராம அலுவலர் பிரிவில் 40  வீடுகளும் வித்தியாபுரம் கிராம அலுவலர் பிரிவில் 24 வீடுகளும் கற்சிலைமடு கிராம அலுவலர் பிரிவில்27 வீடுகளும் தட்டயர்மலை கிராம அலுவலர் பிரிவில் 23 வீடுகளும் 

முத்துவினாயகபுரம் கிராம அலுவலர் பிரிவில் 9 வீடுகளும் ஒதியமலை கிராம அலுவலர் பிரிவில் 2 வீடுகளும் பழம்பாசி கிராம அலுவலர் பிரிவில் 27 வீடுகளும் முத்துஜயன்கட்டுகுளம் கிராம அலுவலர் பிரிவில் 29 வீடுகளும் பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவில் 

5 வீடுகளும் மாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 65 வீடுகளும் பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் 13 வீடுகளும் திருமுறிகண்டி கிராம அலுவலர் பிரிவில் 55 வீடுகளும் இந்துபுரம் கிராம அலுவலர் பிரிவில் 29 வீடுகளும் தச்சடம்பன் கிராம அலுவலர் பிரிவில் 

8 வீடுகளும் ஒலுமடு கிராம அலுவலர் பிரிவில் 20 வீடுகளும் அம்பகாமம் கிராம அலுவலர் பிரிவில் 13 வீடுகளும்   மணவாளன்பட்டமுறிப்பு கிராம அலுவலர் பிரிவில் 16  வீடுகளுமாக மொத்தமாக 542 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.