மாந்தை கிழக்கில் காணி பிணக்குகள் குறித்த அமா்வு, பெருமளவு மக்கள் கலந்து கொண்டனா்..

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட நீண்ட நாட்க ளாக தீர்க்கப்படாதிருந்த காணிப்பினக்குகளை தீர்க்கும் முகமான நடமாடும் சேவை ஒன்று இன் று காலை 9 மணி முதல் மாலை வரை மாந்தை கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தி ல் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட 15 கிராம அலு வலர் பிரிவுகளிலும் மிக நீண்ட காலமாக தீர்க்கப்படாதிருந்த 13 காணி பிணக்குகள் தொடர்பில் ஆராய்ந்து பிரச்சனைகளை தீர்க்கும் முகமாக இந்த நடமாடும் சேவை இடம்பெறுகிறது. மாந் தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ந.றஞ்சனா தலைமையில்
இடம்பெறும் இந்த நடமாடும் சேவையில் மாகாண காணி ஆணையாளர் திரு பொ.குகநாதன் உதவி காணி ஆணையாளர் திரு கை.மகேஸ்வரன் மாகாண காணி திணைக்கள காணி உத்தி யோகத்தர் திரு செ.சண்முகநாதன் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் கலந்து கொ ண்டு காணி பிணக்குகள் தொடர்பில் ஆராய்ந்து
பிரச்சனைகளை தீர்க்கும் முகமாக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.