SuperTopAds

முல்லைத்தீவு நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு, வேலியில்போன ஓணானை பிடித்து வேட்டிக்குள் விட்டவன் நிலையில் பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு, வேலியில்போன ஓணானை பிடித்து வேட்டிக்குள் விட்டவன் நிலையில் பொலிஸாா்..

கேப்பாபிலவு மக்கள் இராணுவ முகாமிற்கு முன்னால் இருந்து ஜனநாயக வழியில் போராட்டம் நடாத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், வேலியில்போன ஓணானை பிடித்து வேட்டிக்குள் விட்ட நிலையில் பொலிஸாா் தற்போது நிற்கின்றனா். 

கேப்பாபிலவு மக்கள் இராணுவ முகாமிற்கு முன்பாக போராட்டம் நடாத்துவது இராணுவத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கோாி முள்ளியவளை பொலிஸாா் நீதிமன்றில் வழக்கு தொ டா்ந்தனா். இந்நிலையில் இராணுவ முகாமிலிருந்து 75 மீற்றருக்கு

அப்பால் இருந்து போராட்டம் நடாத்துமாறும், குறித்த பகுதியை நிதிமன்ற அதிகாாிகள் உள்ளி ட்ட அதிகாாிகள் நோில் பாா்த்தவுடன் மீதி நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த சில நாட்களு க்கு முன்னா் நீதிமன்றம் கூறியிருந்தது. 

இதற்கமைய அதிகாாிகள் குழு மற்றும் சட்டத்தரணிகள் இராணுவ முகாம் வாயிலுக்கு 10 மீற் றா் முன்னால் உள்ள மக்களின் காணிகளில் இருந்து மக்கள் போராடலாம் என தீா்மானிக்கப் பட்டதற்கு அமய நீதிமன்றம் அந்த உத்தரவை வழங்கியுள்ளது.