சொந்த நிலத்தில் வாழும் உாிமைக்காக போராடும் மக்கள், 2 வருடங்களின் பின் ஜனாதிபதியின் செயலாளா் சந்திக்கிறாா்..
முல்லைத்தீவு - கேப்பாபுலவு பகுதியில் தமது நிலத்தைக் கேட்டுப் போராடும் மக்கள் 31ம் திகதி ஜனாதிபதியின் செயலாளரை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்காந்தராயாவின் ஏற்பாட்டில் சந்திக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியில் கடந்த 755 நாட்களிற்கும் மேலாக தமது பூர்விக நிலங்களில் இருந்து படையினர் வெளியேற வேண்டும் என மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும் நிலையில் பல முறை பலரும் வாக்குறியளித்தபோதும் இதுவரை தீர்வு கிட்டவில்லை.
இதன் காரணமாக குறித்த விடயத்திற்கு விரைந்து தீர்வு வழங்க வேண்டும். எனக் கோரிக்கை முன் வைக்கின்றனர்.அவ்வாறு முன்வைக்குத் விடயம் தொடர்பில் கலந்துரையாடவே மேற்படி சந்திப்பு ஒருங்கு செய்யப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் தலமையில் இடம்பெறும் சந்திப்பில் போலாட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் சார் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.