மாவீரா் குடும்பங்களுக்கு உலா் உணவு நிவாரணம் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினா்..

பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி - சிறீற்கந்தராசாவின் நிதி ஒதுக்கீட்டில், மக்கள் நலன் காப்பகத்தினூடாக தெரிவுசெய்யப்பட்ட ஐம்பது மாவீரர்களின் பெற்றோர்களுக்கு உலருணவும் பொதிகள் வழங்கிவைக்கப்பட் டுள்ளன.
குறித்த நிகழ்வானது 29.01.2019 இன்றைய நாள் முல்லைத்தீவு - வண்ணாங்குளம் பகுதியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டகத்தில், மக்கள் நலன் காப்பகத்தின் முல்லை மாவட்டத் தலைவர் பாலு - மத்தியூசு நெறிப்படுத்த லில் இடம்பெற்றது.
மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கிய இந் நிகழ்வில், அகவணக்கம், உரைகள் என்பன இடம்பெற்று தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்களுக்கான உலருணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டன.
மேலும் இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி - சிறீற்கந்தராசா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன், பங்குத் தந்தை அன்ரன் சோர்ச், கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர்களான
சி.லோகேசுவரன், ம.தொம்மைப்பிள்ளை, தி.இரவீந்திரன் மற்றும் மக்கள் நலன் காப்பக நிர்வாகிகள், வண்ணாங்குளம் கிராம உத்தியோகத்தர் வே.அருணோதயம், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மா.செயசுதர்சன்
ஆகியோரோடு மாவீரர்களின் பெற்றோர்களும் இந் நிகழ்வில் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.