யாழ்ப்பாணம்- சர்வதேச வர்த்தக கண்காட்சியில் நடந்த மோசடி வியாபரம், ஏமாற்றப்பட்ட மக்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம்- சர்வதேச வர்த்தக கண்காட்சியில் நடந்த மோசடி வியாபரம், ஏமாற்றப்பட்ட மக்கள்..

யாழ்ப்பாணம்- சர்வதேச வர்த்தக கண்காட்சி கடந்த 3 நாட்களாக யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றிருந்தது. இதன் இறுதி நாளான நேற்று மலிவு விலையில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என விளம்பரம் செய்யப்பட்டு பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. 

இதனையடுத்து மக்கள் அந்த இடத்தில் பெருமளவில் கூடியதுடன் அதிகளவிலான பொருட்களை கொள்வனவு செய்தனர். இந்நிலையில் சிலர் அங்கு சென்று விற்பனை செய்யப்படும் பொருட்களை பார்த்தபோது அவற்றின் காலாவதி திகதி அடுத்த மாதம் நிறைவடையும் என அச்சிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அங்கு பொருட்களை அதிகளவில் வாங்கிக் கொண்டிருக்கும் மக்கள் காலாவதி திகதி குறித்து எந்த கவனமும் செலுத்தவில்லை. அதேபோல் விற்பனையாளர்களும் பொருட்களின் காலாவதி திகதிக்கு ஒருமா தத்திற்கும் குறைந்த நாட்களே உள்ளது என்பதை மக்களுக்கு கூறவில்லை. 

யாழ்ப்பாணம்- சர்தேச வர்த்தக கண்காட்சி என்பது யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் தொழிமுயற்சியாளர்களை தொழிலுக்கான மூல வளங்களை வழங்குவோருடன் இணைக்கும் ஒரு ஊடகமாக பயன்படுத்தப்படும் என அறியப்பட்டிருக்கின்றது. 

அவ்வாறான ஒரு பாரிய சந்தையில் இவ்வாறான மிகமோசமான செயற்பாடுகளுக்கு இடமளிப்பது முறையா? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு