“உத்தரதேவி” ரயிலில் இருந்தபடி ஜனாதிபதி கூறிய நகைச்சுவை, அனைவரும் விழுந்து விழுந்து சிாித்தனராம்..

ஆசிரியர் - Editor I
“உத்தரதேவி” ரயிலில் இருந்தபடி ஜனாதிபதி கூறிய நகைச்சுவை, அனைவரும் விழுந்து விழுந்து சிாித்தனராம்..

மருதானையில் இறங்கும்போது டிக்கட் எடுக்காமல் ரயிலில் ஏறியதற்காக எல்லோரையும் பிடிக்கபோகிறாா்கள். நான் யாரையும் காப்பாற்றமாட்டேன். என ஜனாதிபதி மைத்திாி பா ல சிறிசேன உத்தரதேவி ரயிலில் இருந்தபடி நகைச்சுவையாக பேசியுள்ளாா். 

கொழும்பு கோட்டை - காங்சேன்துறைக்கிடையிலான உத்தரதேவி ரயில் சேவை இன்று காலை 6.00 மணிக்கு ஆரம்பமானது. இதற்கான ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, 

இந்திய உயர்தானிகர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோர் கலந்துகொண்டனர். சேவையை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மருதானை புகையிரத நிலையம் வரை பயணிகளுடன் பயணித்தார்.

இதன்போதே அவர் சிரித்தபடி "இப்போது மருதானையில் இறங்கியவுடன் டிக்கட் இல்லையென எல்லோரையும பிடிக்கப் போகின்றார்கள். நான் யாரையும் காப்பாற்ற மாட்டேன்" என நகைச்சுவையாக தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு