“உத்தராதேவி” ரயில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டது, சேவையை ஆரம்பித்து வைத்தாா் ஜனாதிபதி..

ஆசிரியர் - Editor I
“உத்தராதேவி” ரயில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டது, சேவையை ஆரம்பித்து வைத்தாா் ஜனாதிபதி..

யாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் புதிதாக சேவையில் ஈடுபடுத்துவதற்காக இந்தியாவி டமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட “உத்தராதேவி” ரயில் இன்று காலை 6 மணிக்கு கொ ழும்பு கேட்டையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான தனது சேவையை ஆரம்பித்துள்ளது. 

அதன் சேவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இந்திய தூதுவர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்துள்ளனர்.

724 பயணிகள் ஒரே தடவையில் பயணிக்கும் வசதி கொண்ட இந்த புகையிரதத்தில் முதலாம் வகுப்புப் பெட்டியும் இரண்டாம் வகுப்புப் பெட்டியும் குளிரூட்டப்பட்டவை. இந்தி யாவிலி ருந்து கொண்டு வரப்பட்ட இந்த புகையிரதம் வடக்கு, 

தெற்கு நல்லிணக்கத்தை குறிக்கும் வகையில் சேவையில் ஈடுபடுகின்றது என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த புகையிரதத்தின் இன்றைய முதலாவது சேவையில் யாழ். மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பைகள், 

அப்பியாசப் புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டு ள்ளன என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு