SuperTopAds

வாய் வீரம் வேண்டாம்.. செயலில் பௌத்த மயமாக்கலை நிறுத்த முடியுமா..? ரவிகரன் சாட்டை.

ஆசிரியர் - Editor I
வாய் வீரம் வேண்டாம்.. செயலில் பௌத்த மயமாக்கலை நிறுத்த முடியுமா..? ரவிகரன் சாட்டை.

வடமாகாணத்தில் பௌத்த மயமாக்கலை நிறுத்தவேண்டும். எனவும் அதற்காக பௌத்த மத தலைவர்களை சந்திக்கப்போவதாகவும் கூறும் வடமாகாண ஆளுநருடைய கருத்து வெறும் கருத்து மட்டுமே. அதனால் ஆகப்போவது எதுவும் இல்லை. அதனையும் மீறி அவர் எதாவது செய்யப்போகிறார் என்றால் அவர் தற்போது இருக்கும் ஆளுநர் ஆசனத்தில் அவர் இருக்கபோவதில்லை.

மேற்கண்டவாறு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறியுள்ளார். வடமாகாணத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பௌத்த மயமாக்கலை நிறுத்தவேண்டும் எனவும், அதற்காக பௌ த்த மத தலைவர்களை தாம் சந்தித்து பேசவுள்ளதாகவும் புதிய வடமாகாண அளுநர் சுரேன் ரா கவன் கூறியுள்ளார். இந்த கருத்தின் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் பௌத்த துறவி 

ஒருவர் தமிழ் மக்கள் பிள்ளையார் ஆலயம் ஒன்றில் வழிபாடு நடாத்துவதற்கு இடையூறு விளைவித்துள்ளார். இந்நிலமைகள் குறித்து கருத்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், இன்று நேற்றல்ல போருக்கு பின்னராக கடந்த 10 வரு டங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக அதிகமாகவும், வடக்கின் மற்றய மாவட்டங்களில்

குறைந்தளவிலும் பௌத்தர்களே வாழாத இடங்களில் அல்லது பௌத்தர்களுக்கு சம்மந்தமே இல்லாத இடங்களில், முன்னரும் பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த விகாரைகள் அமை க்கப்படுவதை நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறோம். எமது கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியி ருக்கின்றார்கள். ஆகவே இது ஒன்றும் அரசுக்கு அல்லது பௌத்தமத தலைவர்களுக்கு 

தெரியாத புதிய விடயம் அல்ல. சொல்லப்போனால் அவர்களுடைய ஆசிகளுடன் அல்லது வழிகாட்டுதல்களுடனேயே இவை நடக்கிறதா? என்ற நியாயமான சந்தேகமும் கூட எமக்குள்ளது. அவ்வாறிருக்க ஆளுநர் இவ்வாறான கருத்து ஒன்றை கூறியிருப்பதை வெறும் கருத்தாக மட்மே பார்க்க முடியும். அதற்கும் அப்பால் எதையும் செய்வார் என பார்ப்பதில் அர்த்தம் இருக்காது. 

மேலும் பௌத்த மயமாக்கலை நிறுத்தவேண்டும் என கூறும் புதிய ஆளுநர் இதுவரையில் வடக்கில் உள்ள 5 மாவட்டங்களில் எதாவது ஒரு மாவட்டத்திற்கு சென்று அங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பௌத்த மயமாக்கல் குறித்தும் அதற்கு பின்னால் உள்ள விடயங்கள் குறித்தும், பௌத்தமயமாக்கலுக்காக எந்த சம்மந்தமும் இல்லாமல் வந்து தங்கியிருக்கும் பௌத்த துறவிகள் குறித்தும்

அவர்களுக்கு சட்டத்தை பாதுகாக்கவேண்டிய பொலிஸார் கொடுத்துள்ள அதிகாரத்தை குறித்தும் புதிய ஆளுநர் பார்த்துள்ளாரா? இதுவரை பார்த்ததாக நான் அறியவில்லை. அவ்வாறு பார்த்தால் அவர் தனது கருத்தை மீள பெற்றுக் கொண்டாலும் பெற்றுக்கொள்வார். காரணம் வடக்கில் வி சேடமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு இடத்தில் விகாரை கட்டுப்படுகிறது என்றால் 

அங்கு வந்து தங்கியிருக்கும் பௌத்த துறவிக்கு முப்படைகள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட சகலவற் றையும் அடக்கி ஆழும் அதிகாரம் இருக்கிறது. அந்த அதிகாரம் யார் கொடுத்தது? ஏன் கொடுக் கப்பட்டது? என்பனபோன்ற விடயங்களை ஆராய்ந்தால் ஆளுநர் இனி ஒருபோதும் பௌத்தமய மக்கல் குறித்து பேசமாட்டார் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.