SuperTopAds

மக்களிடம் சென்றது தமிழ்த் தேசியப் பேரவை!

ஆசிரியர் - Admin
மக்களிடம் சென்றது தமிழ்த் தேசியப் பேரவை!

தமிழ்த்தேசிய அரசியலில் மாற்றத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்திருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தமிழ்த் தேசியப் பேரவை கூட்டினில் போட்டியிடும் வட்டுக்கோட்டை தொகுதி வலிமேற்கு பிரதேச சபை வேட்பாளர்கள் அறிமுகம் இன்று சங்கரத்தை வீதியில் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்றது.

மனித உரிமைகள் சட்டத்தரணி சுகாஸ் கனகரத்தினம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் பிரசன்னமாகியிருந்தார்.

இதனிடையே தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து தேர்தல் களத்தை காணும்; தமிழர் சம உரிமை இயக்கம், உள்ளுராட்சி சபைகளுடாக முன்னெடுக்கவுள்ள செயற்றிட்டங்கள் அடங்கிய முன்மொழிவுகளை இன்று சனிக்கிழமை காங்கேசன்துறையில் வைத்து வெளியிட்டுள்ளது.

தமிழர் சம உரிமை இயக்கத்தின் பொதுச் செயலாளரும் வலி.வடக்கு பிரதேச சபையின் முதன்மை வேட்பாளருமான தாயுமானவர் நிகேதன், வலி.மேற்கு பிரதேச சபை வேட்பாளரும் ஊடகவியலாளருமான ந.பொன்ராசா, காரைநகர், பூநகரி, மாந்தை மேற்கு, வவுனியா, மற்றும் பொத்துவில் பிரதேச சபைகளுக்காகப் போட்டியிடும் வேட்பாளர்கள் வலி.வடக்கு வேட்பாளர்களுடன் இணைந்து இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர். 

‘தன்னிறைவான தமிழ் கிராமங்கள்; சரிநிகர் சமானமான உள்ளூராட்சி’ என்ற தொனிப்பொருளில் தமிழர் சம உரிமை இயகத்தின் முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 

இந்த நிகழ்வில், தமிழ்த் தேசியப் பேரவையின் தலைமைக் கட்சிகளான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரமுகர்கள், நம்பிகள் நல்வாழ்வு கழகம், தமிழர் வாழ்வுரிமை மையம் உள்ளிட்ட ஏனைய பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், சட்டத்தரணிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

tnpf1

tnpf2