முல்லைத்தீவில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பேசினார் அமைச்சர் சம்பிக்க..
கனமழை மற்றும் வெள்ள பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பார்வையிடுவதற்காக இன்று வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க,
முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறிப்பாக புதுக்குடியிருப்பு- இருட்டுமடு பகுதிக்கு சென்ற அமைச்சர்,
அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன், அங்கு பாதிக்கப்பட்ட மக்களுடைய வீடுகளுக்கும் சென்று அங்குள்ள நிலமைகளையும் அவதானித்திருக்கின்றார்.
தொடர்ந்து விஸ்மடு- பாரதி விதியாலயத்திற்கு சென்ற அமைச்சர் அங்கு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.