ஆம் பௌத்த மதத்திற்கு முன்னுாிமை என்பதற்கு நாங்கள் இணங்கியுள்ளோம்.. அதில் என்ன பிரச்சினை? எம்.ஏ.சுமந்திரன் கேள்வி.

ஆசிரியர் - Editor

புதிய அரசியலமைப்பில் ஏக்கிய இராச்சிய என கூறப்பட்டுள்ளதன் அா்த்தம் ஒற்றையாட்சியா..? இதற்கு நான் 100 தடவைகள் விளக்கம் கொடுத்துவிட்டேன். ஆனாலும் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராச்சிய என்பதற்கு ஒற்றையாட்சிதான் அா்த்தம் என எழுதிக் கொண்டிருக்கின்றன. 

மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளாா். இன்று காலை அவரு டைய அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவி க்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

மகாநாயக்கர்களைச் சந்தித்த ரணில் ஒற்றையாட்சி தீர்வை வழங்குவதாக வாக்குறுதியளித்த தாக தமிழ் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. ரணில் விக்கிரமசிங்கவும் மகாநாயக்க ர்களும் தமிழிலா உரையாடினார்கள். அவர்கள் சிங்களத்தில் தான் உரையாடினர். 

அதன்போது ஏக்கிய இராட்சிய என்றே கூறியிருப்பார். ஒற்றையாட்சி என்று கூறியிருக்கமாட்டா ர்கள். ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி இல்லை. இதனை நான் 100 தடவைகளுக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனால் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராட்சிய என்றால் 

ஒற்றையாட்சி என்றே எழுதுகின்றன. மகாநாயக்கர்களுடனான சந்திப்பின்போது பௌத்தத்தி ற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார் என எழுதியுள்ளார்கள். ஆம் நாம் உத்தேச அரசியல் யாப்பின்போதே அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். 

பௌத்த த்திற்கு முன்னுரிமை கொடுப்பதில் எமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அனைத்து மதங்களும் மதிக்கப்பட்டு அவை சம அந்தஸ்தில் நோக்கப்படவேண்டும் என்றார்.

Radio
×