SuperTopAds

இழப்பீட்டை 25 ஆயிரம் ரூபாயாக அதிகரியுங்கள், அனர்த்தம் தொடர்பாக விசாரணை நடாத்துங்கள். பிரதமரிடம் டக்ளஸ் கோரிக்கை.

ஆசிரியர் - Editor I

கனமழை மற்றும் வெள்ள பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். 

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் இன்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக இரண்டு மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10‍ ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அந்த நிதி போதாது எனவும் அந்நிதியை 25ஆயிரம் ரூபாவாக அதிகரித்து

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என இதன்போது டக்ளஸ் தேவானந்தா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே இரணைமடுக் குளத்தின் நீர் முகாமைத்துவம் சீரின்மை காரணமாகவே 

மக்களுக்கு இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா துறைசார்ந்தவர்களின் அசமந்த போக்கும் கவனயீனமும் இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்தார்.

இதனடிப்படையில் துறைசார்ந்த அமைச்சரூடாக விரைவான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

//let deferredPrompt; // //window.addEventListener('beforeinstallprompt', function(event) { // // Prevent Chrome 67 and earlier from automatically showing the prompt // event.preventDefault(); // // Stash the event so it can be triggered later. // deferredPrompt = event; //}); // Installation must be done by a user gesture! Here, the button click /* if(btnAdd) { btnAdd.addEventListener('click', (e) => { // hide our user interface that shows our A2HS button btnAdd.style.display = 'none'; // Show the prompt deferredPrompt.prompt(); // Wait for the user to respond to the prompt deferredPrompt.userChoice .then((choiceResult) => { if (choiceResult.outcome === 'accepted') { console.log('User accepted the A2HS prompt'); } else { console.log('User dismissed the A2HS prompt'); } deferredPrompt = null; }); }); } */ //$('a.logo-link').append('
');