முல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆய்வு!

ஆசிரியர் - Admin
முல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆய்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவின் கீழான மன்னாகன்டன் பகுதியில் அமையப்பெற்றுள்ள மூன்று இடைத்தங்கல் முகாம்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா நேரில் விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொண்டார்.

இதன்போது குறித்த இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவிப் பொருட்களையும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கி வைத்தார்.

இதனிடையே சுதந்திரபுரம் பகுதியில் அமையப்பெற்றுள்ள இடைத்தங்கல் முகாமிற்கும் டக்ளஸ் தேவானந்தா விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது சுகாதார நடைமுறைகள் தொடர்பாகவும் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்பவர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு