சாவகச்சேரி :கூட்டமைப்பிற்கு எதிராக அருந்தவபாலன்!

ஆசிரியர் - Admin
சாவகச்சேரி :கூட்டமைப்பிற்கு எதிராக அருந்தவபாலன்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சாவகச்சேரி நகரசபை தேர்தல் வேட்பாளர்களை ஆதரிப்பதில்லையென அதன் தென்மராட்வசி அமைப்பாளர் அருந்தவபாலனும் அவரது ஆதரவாளர்களும் முடிவு செய்துள்ளனர்.இதனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வெற்றி கேள்விக்குறிக்குள்ளாக தொடங்கியுள்ளது.

இதனிடையே தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவது தொடர்பான முடிவெதனையும் எடுத்திருக்கவில்லையென தெரிவித்து அருந்தவபாலன் தமிழரசுகட்சி ஆதரவாளர்கள் சிலர் அவ்வாறு பிரச்சாரங்களை முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி நகரசபை வேட்பாளர் பட்டியலில் அருந்தவபாலனின் ஆதரவாளர்கள் முற்றாக நீக்கப்பட்டதனையடுத்து அருந்தவபாலன் கடும் சீற்றங்கொண்டுள்ளார்.தான தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டன் எதிரொலியாக, சாவகச்சேரி நகரசபையில் தமிழரசுக்கட்சி வேட்பாளர்களை ஆதரிக்காமல் இருப்பதென முடிவு செய்துள்ளார்.

கூட்டமைப்பிற்கான சாவகச்சேரி நகரசபை வேட்புமனுவை அருந்தவபாலன் தயாரித்திருந்தபோதும், வடமாகாணசபை உறுப்பினர் சயந்தனால் அது முற்றாக மாற்றியமைக்கப்பட்டதுடன் அருந்தவபாலனின் ஆதரவாளர்களது பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது.

முன்னரும் நாடாளுமன்ற தேர்தலில் சரவணபவனை வெல்ல வைக்க பலியாடாக்கப்பட்டதுடன் தேசிய பட்டியலில் சந்தர்ப்பம் வழங்கப்படுமென கூறப்பட்டு ஏமாற்றப்பட்டிருந்தது.

தற்பேர்து வேட்பாளர் பட்டியல் சயந்தனால் மாற்றியமைக்கப்பட்ட நிலையினில் மாவையின் மகனோ நாயே வெளியே போவென கலைத்துமிருந்தார்.இவ்வாறு அவமதிக்கப்பட்டமை தொடர்பில் தமிழரசுக்கட்சி தலைவர்கள் யாரும் அருந்தவபாலனுடன் இதுவரை பேசவில்லை. சிறிதரன் மட்டுமே சம்பவம் நடந்ததற்கு மறுநாள் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.பின்னர் அவரும் பேசுவதில்லை.

இந்நிலையில் தமிழரசுக்கட்சியுடன் தொடர்ந்து சேர்ந்திருப்பது தொடர்பில் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.சரியான பாடம் படிக்க தவறினால் தாங்கள் விலகிச்செல்ல இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.

இதனையடுத்தே அருந்தவபாலன் தீர்க்கமான முடிவொன்றிற்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு