தமிழீழ விடுதலை புலிகளே பாதுகாத்த சிங்கள தலைவா் ஒருவாின் நினைவுக்கல்லை அழித்து அகற்றிய ஜனாதிபதி மைத்திாி.. தன்னுடைய பெயரை பொறித்தாா்.

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளே பாதுகாத்த சிங்கள தலைவா் ஒருவாின் நினைவுக்கல்லை அழித்து அகற்றிய ஜனாதிபதி மைத்திாி.. தன்னுடைய பெயரை பொறித்தாா்.

கிளிநொச்சி மாவட்டத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இரணைமடுக் குளம் அந்த மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் தேசிய வருமானத்திற்கும் பெருதும் உதவுவதோடு அந்த மாவட்டத்தின் பசுமைக்கும் காரணகர்த்தாவாக இருப்பது இந்த இரணைமடுக் குளம். என்றால் மிகையாகாது.

இவ்வாறு காணப்படும் குளமானது 1906ம் ஆண்டு முதன் முதலாக கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1922ம் ஆண்டு நீர்ப்பாசணத்திற்காக திறந்து வைக்கப்பட்டது. இவ்வாறு முதன் முதல் மேற்கொண்ட குள அமைப்பு பணியானது முழுமையாக மனித வலுவால் அமைக்கப்பட்டது. இவ்வாறு 1922ம் ஆண்டு அமைக்கப்பட்ட குளமானது 22 அடி கொள் அளவாக காணப்பட்டது. அதன் பின்னர் 1951ம் ஆண்டு குளத்தில் பாரிய அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு அதன் கொள் அளவு 30 அடியாக உயர்த்தப்பட்டது.

இவ்வாறு 30 அடியாக கானப்பட்ட குளம் மீண்டும் 1954ம் ஆண்டு முதல் 1956ஆம் ஆண்டுவரை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 32 அடியாக கொள் அளவு அதிகரிக்கப்பட்டது. இதன் நிறைவிலேயே அப்போதைய பிரதர் டி..எஸ்.சேனாநாயக்கா வருகை தந்து நினைவுக்கல் ஒன்றையும் திறந்து வைத்தார்.

போர் காலத்திலேயே அழிக்கப்படாத நினைவுக்கல்லை தற்போதைய ஜனாதிபதிக்காக இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டது.

அவ்வாறு டட்லி சேனாநாயக்காவால் திறந்து வைக்கப்பட்ட கல்லானது இத்தனை ஆண்டு காலம் இடம்பெற்ற போரின்போது புலிகளாலும் அதன் வரலாறு கருதி பேணப்பட்டது.

இவ்வாறு காணப்பட்ட குளம் தொடர்பில் விடுதலைப் புலிகளின் வேண்டுதலின் பெயரில் 
நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்ட நிதியில் புனரமைப்புச் செய்யப்பட்ட இரணைமடுக் குளமானது தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் திறந்து வைக்கப்பட்டது. 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2 ஆயிரத்து 130 மில்லியன் ரூபா செலவில் 2016ஆம் ஆண்டு ஆரம்பமான அபிவிருத்திப் பணிகள் 2018ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவுற்றது. இவ்வாறு இடம்பெற்ற அபிவிருத்திப் பணியின் மூலமே 34 அடி கொள் அளவாக கானப்பட்ட இரணைமடுக் குளமானது அதன் கொள் அளவு 36 அடியாக உயர்த்தப்பட்ட நிலையில் குளமும் 36 அடி நீரை முழுக் கொள் அளவாக காணப்படுகின்றது.

2000ஆம் ஆண்டு முதன் முதல் கோரிக்கை விடப்பட்டு சமாதான காலத்தில் இரணைமடுக்குள அபிவிருத்தி , யாழ்ப்பாணம் கிளிநொச்சி குடிநீர்த்திட்டம் , யாழ்ப்பாண மாநகர சபைப் பிரதேச பாதாள சாக்கடைத் திட்டம் என ஒருங்கிணைந்த 3 திட்டங்களாக செயல்படுத்த ஆரம்ப மதிப்பீடுகள் , திட்ட முன்மொரிவுகள் , மாதிரிப் படத் தயாரிப்புக்கள் இடம்பெற்றவேளையில் போர் ஆரம்பித்த காரணத்தினால் திட்டம் தாமதப்பட்டது.

குளப் புனரமைப்பிற்கான ஒப்பந்தம்.

இவ்வாறு தற்போது அபிவிருத்தி செய்யப்பட்ட இரணைமடுக் குளத்தின் புனரமைப்பிற்காக 
2007- 07-13 அன்று தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்ணாத்தானபோதும் போரால் திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.
இதன் பின்னர் போர் முடிவுற்ற நிலையில் ஆரம்பிக்க முற்பட்டநிலையில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி குடிநீர்த் திட்டம் தொடர்பில் எழுந்த எதிர்ப்பினால் இரணைமடு அபிவிருத்தி மட்டும் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட இரணைமடுக் குளத்தினையே திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கடந்த 2018-12-07 அன்று வருகை தந்தார். அவ்வாறு வருகை தந்த ஜனாதிபதி ஓர் வரலாற்றை அழித்துவிட்டுச் சென்றுள்ளார். இனத்தையே அழித்தவர்களிற்கு வரலாற்றை அழிப்பது ஒன்றும் புதிய விடயம் அல்ல.

இனத்தையே அழித்தவர்கள் இன்று வரலாற்றையும் அழித்தனர்.

அதாவது 1954ஆம் ஆண்டு முதல் 1956ம் ஆண்டு வரை இடம்பெற்ற அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இலங்கையின் அன்றைய பிரதமர் டட்லி சேனாநாயக்க குளத்தை திறந்து வைக்கப்பட்ட நிலையில் அன்றைய நாளில் ஓர் நினைவுக்கல்லையும் திறந்து வைத்தார். அவ்வாறு திறந்து வைக்கப்பட்ட கல்லே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா திறந்து வைத்தார் என பெயர் சூட்டுவதற்காக இரவோடு இரவாக 2018-12-06 அன்று இடித்து அழிக்கப்பட்டு புதிய கல்லை நாட்டிய நிலையில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது பெயரை பொறித்து திறந்து வைத்துள்ளார்..

இதேநேரம் இவ்வாறு வடக்கு மாகாணத்திலேயே மிகப்பெரும் சொத்தாக கானப்படும் இந்த இரணைமடுக் குளத்தினை நம்பியே ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில. இருந்து பலர் கிளிநொச்சியில் சென்று குடியேறிய வரலாறுகளும் உண்டு. இதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் வயல் நிலம் உள்ளபோதிலும் தற்போது 21 ஆயிரத்து 800 ஏக்கர் நிலத்திற்கே நீர்ப்பாச்சும் வாய்க்கால் வழிப்பாதைகளும் குறித்த அளவு நிலங்களிற்கு மட்டுமே சட்ட பூர்வமான பதிவுகளும் உண்டு.

இரணைமடுக் குளத்தினால் முழு மாவட்டமே நன்மையை ஈட்டும்.

அதாவது இக் குளத்தின் பாச்சல் தறைகளின் ஓரம் மேலும் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளபோதும் இவர்களிற்கு நீர்ப்பாச்சும் வசதி இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இதேநேரம் இரணைமடுக் குளத்தின் கீழ் 1965 ஆம் ஆண்டு முதன் முதலாக திருவையாறுக் கிராமத்திற்கு ஏற்று நீர்ப்பாசணத் வழங்கப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் 1977 ஆம் ஆண்டு மேலும் விஸ்தரிக்கப்பட்டு அது ஆயிரத்து 200 ஏக்கர் மேட்டு நிலப் பயிர் செய்கைக்கும் நீர் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்டு வந்த ஏற்று நீர்ப்பாசணத் 2ம் கட்ட ஈழப்போருடன் முழுமையாக அழிவடைந்த்து.

அவ்வாறு அழிவடைந்த ஏற்று நீர்ப்பாசணமும் தற்போது புனரமைக்கப்பட்டு சுமார் 600 ஏக்கர் நிலத்திற்கு நீர் பாச்சும் வசதி ஏற்படுத்தப்படுகின்றது. இவ்வாறு கானப்படும் இரணை மடுக் குளத்தில் இரு நன்னீர் மீன் பிடிச் சங்கங்கத்தின் ஊடாக சுமார் 180 மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.

இவை அனைத்திற்கும் அப்பால் தற்போது இரு பெரிய நீர்த்தாங்கிகள் கட்டப்பட்டு குடிநீர் வசதிகளும் வழங்கப்படும் அதேநேரம் மேலும் சில பகுதிகளிற்கு விஸ்தரிக்கும் முயற்சியும் ஈடம்பெறுகின்றது.

இவ்வாறு மாவட்டத்தின் பல தேவைகளை நிறைவேற்றும் கிளிநொச்சியில் அமைத்துள்ள முத்து இன்று வட மாகாணத்திற்கே சொத்தாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இரணைமடுக் குளம் அந்த மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் தேசிய வருமானத்திற்கும் பெருதும் உதவுவதோடு அந்த மாவட்டத்தின் பசுமைக்கும் காரணகர்த்தாவாக இருப்பது இந்த இரணைமடுக் குளம். என்றால் மிகையாகாது.

இவ்வாறு கானப்படும் குளமானது 1906ம் ஆண்டு முதன் முதலாக கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1922ம் ஆண்டு நீர்ப்பாசணத்திற்காக திறந்து வைக்கப்பட்டது. இவ்வாறு முதன் முதல் மேற்கொண்ட குள அமைப்பு பணியானது முழுமையாக மனித வலுவால் அமைக்கப்பட்டது. இவ்வாறு 1922ம் ஆண்டு அமைக்கப்பட்ட குளமானது 22 அடி கொள் அளவாக கானப்பட்டது. அதன் பின்னர் 1951ம் ஆண்டு குளத்தில் பாரிய அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு அதன் கொள் அளவு 30 அடியாக உயர்த்தப்பட்டது.

இவ்வாறு 30 அடியாக கானப்பட்ட குளம் மீண்டும் 1954ம் ஆண்டு முதல் 1956ஆம் ஆண்டுவரை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 32 அடியாக கொள் அளவு அதிகரிக்கப்பட்டது. இதன் நிறைவிலேயே அப்போதைய பிரதர் டி..எஸ்.சேனாநாயக்கா வருகை தந்து நினைவுக் கல் ஒன்றையும் திறந்து வைத்தார்.

போர் காலத்திலேயே அழிக்கப்படாத நினைவுக்கல்லை தற்போதைய ஜனாதிபதிக்காக இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டது.

அவ்வாறு டட்லி சேனாநாயக்காவால் திறந்து வைக்கப்பட்ட கல்லானது இத்தனை ஆண்டு காலம் இடம்பெற்ற போரின்போது புலிகளாலும் அதன் வரலாறு கருதி பேனப்பட்டது.

இவ்வாறு கானப்பட்ட குளம் தொடர்பில் விடுதலைப் புலிகளின் வேண்டுதலின் பெயரில் 
நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்ட நிதியில் புனரமைப்புச் செய்யப்பட்ட இரணைமடுக் குளமானது தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் திறந்து வைக்கப்படவுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2 ஆயிரத்து 130 மில்லியன் ரூபா செலவில் 2016ஆம் ஆண்டு ஆரம்பமான அபிவிருத்திப் பணிகள் 2018ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவுற்றது. இவ்வாறு இடம்பெற்ற அபிவிருத்திப் பணியின் மூலமே 34 அடி கொள் அளவாக கானப்பட்ட இரணைமடுக் குளமானது அதன் கொள் அளவு 36 அடியாக உயர்த்தப்பட்ட நிலையில் குளமும் 36 அடி நீரை முழுக் கொள் அளவாக கானப்படுகின்றது.

2000ஆம் ஆண்டு முதன் முதல் கோரிக்கை விடப்பட்டு சமாதான காலத்தில் இரணைமடுக் குள அபிவிருத்தி , யாழ்ப்பாணம் கிளிநொச்சி குடிநீர்த்திட்டம் , யாழ்ப்பாண மாநகர சபைப் பிரதேச பாதாள சாக்கடைத் திட்டம் என ஒருங்கிணைந்த 3 திட்டங்களாக செயல்படுத்த ஆரம்ப மதிப்பீடுகள் , திட்ட முன்மொரிவுகள் , மாதிரிப் படத் தயாரிப்புக்கள் இடம்பெற்றவேளையில் போர் ஆரம்பித்த காரணத்தினால் திட்டம் தாமதப்பட்டது.

குளம் புனரமைப்பிற்கான ஒப்பந்தம்.

இவ்வாறு தற்போது அபிவிருத்தி செய்யப்பட்ட இரணைமடுக் குளத்தின் புனரமைப்பிற்காக 
2007- 07-13 அன்று தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்ணாத்தானபோதும் போரால் திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.
இதன் பின்னர் போர் முடிவுற்ற நிலையில் ஆரம்பிக்க முற்பட்டநிலையில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி குடிநீர்த் திட்டம் தொடர்பில் எழுந்த எதிர்ப்பினால் இரணைமடு அபிவிருத்தி மட்டும் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட இரணைமடுக் குளத்தினையே திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கடந்த 2018-12-07 அன்று வருகை தந்தார். அவ்வாறு வருகை தந்த ஜனாதிபதி ஓர் வரலாற்றை அழித்துவிட்டுச் சென்றுள்ளார். இனத்தையே அழித்தவர்களிற்கு வரலாற்றை அழிப்பது ஒன்றும் புதிய விடயம் அல்ல.

இனத்தையே அழித்தவர்கள் இன்று வரலாற்றையும் அழித்தனர்.

அதாவது 1954ஆம் ஆண்டு முதல் 1956ம் ஆண்டு வரை இடம்பெற்ற அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இலங்கையின் அன்றைய பிரதமர் டட்லி சேனாநாயக்க குளத்தை திறந்து வைக்கப்பட்ட நிலையில் அன்றைய நாளில் ஓர் நினைவுக்கல்லையும் திறந்து வைத்தார். அவ்வாறு திறந்து வைக்கப்பட்ட கல்லே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா திறந்து வைத்தார் என பெயர் சூட்டுவதற்காக இரவோடு இரவாக 2018-12-06 அன்று இடித்து அழிக்கப்பட்டு புதிய கல்லை நாட்டிய நிலையில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது பெயரை பொறித்து திறந்து வைத்துள்ளார்.

ஈழத்தில் மரணித்தவர்களின் கல்லறைகளை இடித்தழித்தவர்களின் கல்லறையினையே இடித்து அழித்து வரலாற்றை அழிக்க முனைந்தபோது 
தென்னிலங்கை வாய் மூடி மௌனமாக இருந்ததன் அறுவடை இன்று தெற்கின் ஓர் தலைவரின் நினைவுக் கல்லையும் இடித்து வரலாறுகளை மறைக்க முனைகின்றனர்.

இதேநேரம் இவ்வாறு வடக்கு மாகாணத்திலேயே மிகப்பெரும் சொத்தாக கானப்படும் இந்த இரணைமடுக் குளத்தினை நம்பியே ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில. இருந்து பலர் கிளிநொச்சியில் சென்று குடியேறிய வரலாறுகளும் உண்டு. இதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் வயல் நிலம் உள்ளபோதிலும் தற்போது 21 ஆயிரத்து 800 ஏக்கர் நிலத்திற்கே நீர்ப்பாச்சும் வாய்க்கால் வழிப்பாதைகளும் குறித்த அளவு நிலங்களிற்கு மட்டுமே சட்ட பூர்வமான பதிவுகளும் உண்டு.

இரணைமடுக் குளத்தினால் முழு மாவட்டமே நன்மையை ஈட்டும்.

அதாவது இக் குளத்தின் பாச்சல் தறைகளின் ஓரம் மேலும் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளபோதும் இவர்களிற்கு நீர்ப்பாச்சும் வசதி இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இதேநேரம் இரணைமடுக் குளத்தின் கீழ் 1965 ஆம் ஆண்டு முதன் முதலாக திருவையாறுக் கிராமத்திற்கு ஏற்று நீர்ப்பாசணத் வழங்கப்பட்டது. 

இதன் பின்னர் மீண்டும் 1977 ஆம் ஆண்டு மேலும் விஸ்தரிக்கப்பட்டு அது ஆயிரத்து 200 ஏக்கர் மேட்டு நிலப் பயிர் செய்கைக்கும் நீர் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்டு வந்த ஏற்று நீர்ப்பாசணத் 2ம் கட்ட ஈழப்போருடன் முழுமையாக அழிவடைந்த்து.

அவ்வாறு அழிவடைந்த ஏற்று நீர்ப்பாசணமும் தற்போது புனரமைக்கப்பட்டு சுமார் 600 ஏக்கர் நிலத்திற்கு நீர் பாச்சும் வசதி ஏற்படுத்தப்படுகின்றது. இவ்வாறு கானப்படும் இரணை மடுக் குளத்தில் இரு நன்னீர் மீன் பிடிச் சங்கங்கத்தின் ஊடாக சுமார் 180 மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.

இவை அனைத்திற்கும் அப்பால் தற்போது இரு பெரிய நீர்த்தாங்கிகள் கட்டப்பட்டு குடிநீர் வசதிகளும் வழங்கப்படும் அதேநேரம் மேலும் சில பகுதிகளிற்கு விஸ்தரிக்கும் முயற்சியும் ஈடம்பெறுகின்றது.

இவ்வாறு மாவட்டத்தின் பல தேவைகளை நிறைவேற்றும் கிளிநொச்சியில் அமைத்துள்ள முத்து இன்று வட மாகாணத்திற்கே சொத்தாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ந.லோகதயாளன்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு