தமிழ்தேசிய கூட்டமைப்பு போா்க்குற்றங்கள் தொடா்பாக எந்த தரப்பினாிடமும், எந்த விடயத்தையும் பேசவில்லை.

ஆசிரியர் - Editor
தமிழ்தேசிய கூட்டமைப்பு போா்க்குற்றங்கள் தொடா்பாக எந்த தரப்பினாிடமும், எந்த விடயத்தையும் பேசவில்லை.

அரசியல் நெருக்கடியின் போது தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் பேசவில்லை என்பது உண்மை இவ்வாறு கூட்ட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

மறைந்திருக்கும் மாணிக்கம் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பரதநாட்டிய போட்டிகளின் இறுதி சுற்று யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் அமைந்துள்ள சங்கீத சபை மண்டபத்தில் நேற்று காலை இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கலந்து கொண்டார்.நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் கடந்த ஆக்டொபர் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து அரசியல் நெருக்கடி நிலை உருவாகியது.இந்த நிலைமையில் நாம் கடசி ரீதியாக கூடி பேசினோம்.

அப்போது ஆக்டொபர்26 ஆம் திகதிக்கு முன்பிருந்த ஆடசி வேண்டும் என்றே கையொப்பம் இட்டிருந்தோம்.மக்கள் பிரச்சனையை யார் தீர்க்குகின்றார்களோ அதற்கு யார் முதலில் வருகின்றார்களோ அவர்களுக்கே ஆதரவு என்ற அடிப்படையில் 

அனைத்த்து தரப்புக்களுடனும் பேசிய பின்னர் இணக்கங்களின் அடிப்படையிலேயே நாம் கடிதத்தில் கையொப்பம் இடடோம்.பல விவாதங்களின் பின்னரே அனைத்து கூட்ட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பம் இடடோம்.

யார் பிரதமர் என்பது பிரச்சனை இல்லை.எமக்கு ரணில் பிரதமராக வருவது பிரச்சனையல்ல.அதனை அவர்களின் கடசியே தீர்மானிக்க வேண்டும்.நாம் கேட்டது ஆக்டொபர் 26 ஆம் திகதிக்கு முன்னர் எப்படி கூடடரசு இருந்ததோ 

அது அமைய வேண்டும் என்பதே எமது இலக்கு ஆகும்.தற்போது சிறிலங்கா சுதந்திரக் கடசியும் ஐக்கிய தேசியக் கடசியும் இணைந்து கூட ஆடசி அமைக்கவுள்ளதாக கூட கருத்துக்கள் வருகின்றன.

ஆகவே அவ்வாறான கூட்டு ஆடசியை கேட்க்கின்றோம்.தமிழர்களுக்கு யார் உதவுவார்களோ அவர்களுக்கு நாம் ஆதரவு கொடுப்போம். இதேவேளை நாம் அரசியல் நெருக்கடி தொடர்பில் தென்னிலங்கை தரப்புடன் 

பேசும்போது தமிழ் மக்களின் இனப்பிரச்சனை சார்ந்தே பேசினோம் தவிர எந்த சந்தர்ப்பத்திலும் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் பேசவில்லை.

ஏனெனில் ஒரு நிலையான அரசு அமையும்போதுதான் நாம் அதனைப் பற்றி பேச முடியும்.ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்படட தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்றுவதின் வேகம் குறைவாக உள்ளது.

நிறைவேற்றப்படட தீர்மானத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டொர் பணியகத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் இடம்பெற்று வருகின்றன.எனினும் அரசின் வேகம் போதாது என்பது உண்மை என்றார்.

Radio
×