வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்ககான உறுப்பினர்களின் வர்த்தமானி அறிவித்தல்!
புதிய முறைப்படி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வட்டார முறைப்படி தெரிவு செய்யப்பட வேண்டிய, விகிதாசார முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் விபரங்கள் இந்த வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகளை உள்ளடக்கி 79 உள்ளூராட்சி சபைகளுக்கும், வட்டார முறையில் தெரிவு செய்யப்பட வேண்டிய, விகிதாசார முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் விபரங்கள் வருமாறு –
மாவட்ட வாரியாக, உள்ளூராட்சி சபைகளினது பெயர்களும், அதற்கடுத்து, வட்டாரமுறையில் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையும், அதையடுத்து, விகிதாசார முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையும் தரப்பட்டுள்ளது.
1. யாழ்ப்பாண மாவட்டம்
யாழ்ப்பாண மாநகர சபை – 27 – 18
பருத்தித்துறை நகர சபை – 09 – 06
வல்வெட்டித்துறை நகர சபை – 09 – 06
சாவகச்சேரி நகர சபை – 11 – 07
தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச சபை – 08 – 05
நெடுந்தீவு பிரதேச சபை -08 -05
வேலணை பிரதேச சபை 12- 08
வலி.மேற்கு பிரதேச சபை 15 – 10
வலி.வடக்கு பிரதேச சபை – 21- 14
வலி.தெற்குமேற்கு பிரதேச சபை – 17 – 11
வலி.கிழக்கு பிரதேச சபை 22- 14
வலி.தெற்கு பிரதேச சபை – 18 – 12
பருத்தித்துறை பிரதேச சபை – 12 -08
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை – 19 – 12
சாவகச்சேரி பிரதேச சபை – 17 -11
நல்லூர் பிரதேச சபை -12 -08
காரைநகர் பிரதேச சபை – 06- 04
2. கிளிநொச்சி மாவட்டம்
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை – 08- 05
கரைச்சி பிரதேச சபை -21 -14
பூநகரி பிரதேச சபை – 11 – 07
3. மன்னார் மாவட்டம்
மன்னார் நகரசபை – 09 – 06
மன்னார் பிரதேச சபை -12- 08
நானாட்டான் பிரதேச சபை – 10 – 06
முசலி பிரதேச சபை -10 – 06
மாந்தைமேற்கு பிரதேச சபை -13 – 08
4. வவுனியா மாவட்டம்
வவுனியா நகரசபை – 12 – 08
வவுனியா வடக்கு பிரதேச சபை -14 – 09
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை – 16 – 10
வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை – 11 – 07
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை – 10 – 06
5. முல்லைத்தீவு மாவட்டம்
மாந்தைகிழக்கு பிரதேச சபை – 08 – 05
துணுக்காய் பிரதேச சபை – 08 – 05
கரைத்துறைப்பற்று பிரதேச சபை – 13 – 08
புதுக்குடியிருப்பு பிரதேச சபை -12 – 08
6. மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு மாநகரசபை – 20 – 13
காத்தான்குடி நகரசபை – 10 -06
ஏறாவூர் நகரசபை – 10 – 06
கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை – 11 – 07
ஏறாவூர்பற்று பிரதேச சபை – 18- 12
கோரளைப்பற்று பிரதேச சபை – 14 – 09
கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை – 11 – 07
மண்முனை தெற்கு எருவில்பற்று பிரதேச சபை – 12 – 08
மண்முனை பிரதேச சபை – 10 – 06
மண்முனை மேற்கு பிரதேச சபை – 10- 06
மண்முனை தெற்கு மேற்கு பிரதேச சபை – 10- 06
போரதீவுப்பற்று பிரதேச சபை – 10 – 06
7. அம்பாறை மாவட்டம்
கல்முனை மாநகரசபை – 24 -16
அக்கரைப்பற்று மாநகரசபை – 12 – 08
அம்பாறை நகரசபை – 10 – 06
தெகியத்தகண்டிய பிரதேச சபை – 23 – 15
காரைதீவு பிரதேச சபை – 07 -04
தமண பிரதேச சபை – 10 – 06
நாவிதன்வெளி பிரதேச சபை – 08 – 05
உகண பிரதேச சபை – 17 – 11
மகாஓயா பிரதேச சபை – 16 – 07
நாமல்ஓய பிரதேச சபை – 10 -06
பதியத்தலாவ பிரதேச சபை – 12 – 08
சம்மாந்துறை பிரதேச சபை – 12 – 08
அக்கரைப்பற்று பிரதேச சபை – 05 – 03
பொத்துவில் பிரதேச சபை – 12 – 08
அட்டாளைச்சேனை பிரதேச சபை – 11- 07
ஆலையடிவேம்பு பிரதேச சபை – 10 – 07
லகுகல பிரதேச சபை – 11 – 07
நிந்தவூர் பிரதேச சபை – 08 – 05
திருக்கோவில் பிரதேச சபை – 10 – 06
இறக்காமம் பிரதேச சபை – 08 – 05
8. திருகோணமலை மாவட்டம்
திருகோணமலை நகரசபை – 14 – 09
தம்பலகாமம் பிரதேச சபை – 10 – 06
கிண்ணியா பிரதேச சபை – 08 – 05
மூதூர் பிரதேச சபை 13 – 08
குச்சவெளி பிரதேச சபை – 10 – 06
திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபை – 12 – 08
பதவிசிறீபுர பிரதேச சபை – 10 – 06
கோமரங்கடவெல பிரதேச சபை – 10 – 06
மொறவெவ பிரதேச சபை – 10 – 06
கந்தளாய் பிரதேச சபை – 13 – 08
சேருவில பிரதேச சபை – 10 – 06
கிண்ணியா பிரதேச சபை – 08 – 05
வெருகல் பிரதேச சபை – 08 – 05