SuperTopAds

தொடர்ந்தும் இழுபறியில் கூட்டமைப்பு – ஒதுங்கும் புளொட்

ஆசிரியர் - Editor II
தொடர்ந்தும் இழுபறியில் கூட்டமைப்பு – ஒதுங்கும் புளொட்

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான பங்குப்பிரிப்புத் தொடர்பில் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட இழுபறி நிலை இன்னமும் முடிவுக்குவரவில்லை என தெரியவந்திருக்கிறது. தமிழ் அர­சுக் கட்­சி­யால் வாய்ப்பு மறுக்­கப்­பட்ட இடங்­க­ளில் தேர்­தல் பரப்­பு­ரை­யி­லி­ருந்து ஒதுங்­கி­யி­ருக்க புளொட் அமைப்பு தீர்மானித்திருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமது கட்­சி­யின் வேட்­பா­ளர்­கள் கள­மி­றங்­கும் வட்­டா­ரங்­க­ளில் மட்­டும் பரப்­பு­ரை­களைத் தீவி­ர­மாக மேற்­கொள்ள அந்­தக் கட்சி திட்­ட­மிட்டு வரு­கின்­றது என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது.

எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பாக, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் வீட்­டுச் சின்­னத்­தில் போட்­டி­யிட பங்­கா­ளிக் கட்­சி­க­ளான ரெலோ மற்­றும் புளொட் என்­பன இணங்­கின.

ஆச­னப் பங்­கீட்­டில் பங்­கா­ளிக் கட்­சி­க­ளுக்கு இடை­யில் ஆரம்­பத்­தில் இணக்­கப்­பாடு காணப்­பட்­டி­ருந்­தா­லும் பின்­னர் அது குழம்­பி­யது. ரெலோ அமைப்பு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யு­டன் இணைந்து போட்­டி­யிட முடி­யாது என்று அறி­வித்­தது.

கொழும்­பில் எட்­டப்­பட்ட இணக்­கப்­பாட்­டுக்கு அமை­வாக இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி ஆச­னங்­களை வழங்­க­வில்லை என்று பங்­கா­ளிக் கட்­சி­கள் குற்­றம் சுமத்­தி­யி­ருந்­தன.

கிளி­நொச்சி, மன்­னார், அம்­பாறை மாவட்­டங்­க­ளில் புளொட் அமைப்­புக்கு எந்­த­வொரு ஆச­ன­மும் வழங்­கப்­ப­ட­வில்லை என்று கூறப்­ப­டு­கின்­றது. ஏனைய மாவட்­டங்­க­ளி­லும் ஒதுக்­கப்­பட்ட வட்­டா­ரங்­களை விடக் குறை­வான வட்­டா­ரங்­களே அந்த அமைப்­புக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. தமது அமைப்­புக்கு ஆச­னம் வழங்­கப்­ப­டாத இடங்­க­ளில் ஒதுங்­கி­யி­ருப்­ப­தற்கு புளொட் அமைப்பு தீர்­மா­னித்­துள்­ளது. அதை வெளிப்­ப­டை­யாக அறி­விக்­கா­மல் அந்­தந்த மாவட்­டங்­க­ளில் உள்ள தமது அமைப்­பா­ளர்­க­ளுக்கு மாத்­தி­ரம் அந்­தக் கட்சி அறி­வு­றுத்­தி­யுள்­ளது என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

மற்­றொரு பங்­கா­ளிக் கட்­சி­யான ரெலோ அமைப்­பின் செய­லர் ந.சிறி­காந்­தா­வி­டம் கேட்­ட­போது, ஆச­னப் பங்­கீட்­டில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி அநீ­தி­யாக நடந்து கொண்­டது. கூட்­ட­மைப்பு என்ற அடிப்­ப­டை­யில் நாம் கூட்­டுப் பொறுப்­பு­ட­னேயே செயற்­ப­டு­வோம் – என்­றார்.