SuperTopAds

இந்தியத் திரைப்பட வசூல் பட்டியலில் அதிரடி மாற்றம் – பின்னுக்குத் தள்ளப்பட்ட 'புஷ்பா 2'!

ஆசிரியர் - Editor I
இந்தியத் திரைப்பட வசூல் பட்டியலில் அதிரடி மாற்றம் – பின்னுக்குத் தள்ளப்பட்ட 'புஷ்பா 2'!

புராண இதிகாசமான இராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'இராமாயணா' திரைப்படம், உலகளாவிய வசூலில் புதிய சாதனையைப் படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் வெளியான 21 நாட்களில் உலகளவில் 1,755.60 கோடி இந்திய ரூபாயை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இதன் மூலம் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2' திரைப்படத்தின் உலகளாவிய வசூலான 1,742 கோடி இந்திய ரூபாய் என்ற சாதனையை 'இராமாயணா' முறியடித்துள்ளது.

இதற்கமைய, அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் 'இராமாயணா' நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தப் பட்டியலில் 2,070 கோடி இந்திய ரூபாய் வசூலுடன் 'தங்கல்' முதலிடத்திலும், 1,813.40 கோடி இந்திய ரூபாய் வசூலுடன் 'துரந்தர் 2' இரண்டாவது இடத்திலும், 1,788 கோடி இந்திய ரூபாய் வசூலுடன் 'பாகுபலி 2' மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இதேவேளை, இந்தத் திரைப்படத்தின் முதல் பாகத்தில் ரன்பீர் கபூர் இராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் இராவணனாகவும் நடித்துள்ளனர்.

இரண்டாம் பாகம் 2028ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 

Radio