SuperTopAds

பாகிஸ்தான் முன்னாள் வீரரின் கருத்தால் வெடித்த சர்ச்சை

ஆசிரியர் - Editor I
பாகிஸ்தான் முன்னாள் வீரரின் கருத்தால் வெடித்த சர்ச்சை

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வயது தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் எனக் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

கட்டாரின் தோஹாவில் நடைபெற்ற ஆசியக் கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 53 பந்துகளில் 204 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

இதன்போது 7 நான்கு ஓட்டங்கள் மற்றும் 28 ஆறு ஓட்டங்களைப் பெற்ற அவர், 52 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து குழு ஏ கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 


அவரது அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் இந்திய ஏ அணி 250 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை 14.2 ஓவர்களில் அடைந்து வெற்றிபெற்றது.

இந்நிலையில், வைபவ் சூர்யவன்ஷியின் வயது 15 எனத் தாம் நம்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தன்வீர் அகமது, அவருக்கு 20 முதல் 21 வயது இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.

மேலும், அவரது உண்மையான வயதைக் கண்டறிய மணிக்கட்டு எலும்புப் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்வீர் அகமதுவின் இந்தக் கருத்துகள் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவருக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Radio