SuperTopAds

இலங்கையில் மூடப்படும் அமெரிக்கத் தூதரகம்?

ஆசிரியர் - Editor II
இலங்கையில் மூடப்படும் அமெரிக்கத் தூதரகம்?

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எதிர்வரும் நவம்பர் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மூடப்பட்டிருக்கும் என அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் 'நன்றி தெரிவிக்கும் தினத்தை' (Thanksgiving Day) முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த இரு தினங்களிலும் தூதரகத்தின் வழமையான சேவைகள் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நவம்பர் 30ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தூதரகத்தின் பணிகள் மீண்டும் வழமைக்குத் திரும்பும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Radio