SuperTopAds

சட்டத்தரணிகளை காதி நீதிபதிகளாக நியமிக்க வேண்டாம் என்பதை 2010ஆம் ஆண்டு முதல் உலமா கட்சி வலியுறுத்தி வருகின்றது: முபாறக் அப்துல் மஜீத்!

ஆசிரியர் - Editor III

கல்முனையில் இடம்பெற்ற நட்பு ரீதியிலான சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானிடம் சுட்டிக்காட்டு!
 
சட்டத்தரணிகளை காதி நீதிபதிகளாக நியமிக்க வேண்டாம் என்பதை 2010ஆம் ஆண்டு முதல் இலங்கை உலமா கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாக அக்கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
எம் மக்கள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் அவர்கள்   கல்முனையிலுள்ள முபாறக் அப்துல் மஜீத் அவர்களின் இல்லத்திற்கு நட்பு ரீதியிலான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இச்சந்திப்பின்போது நாட்டின் சமகால அரசியல் மற்றும் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடினர். இதன் போதே காதி நீதிபதிகள் நியமனம் தொடர்பில் உலமா கட்சியின் நீண்டகால நிலைப்பாட்டை அக்கட்சியின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Radio