முச்சக்கர வண்டியில் வந்து சடலத்தை வீசிச் சென்ற மர்மக் குழு!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் உடலில் பல காயங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இனந்தெரியாத நபர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் வந்து, குறித்த சடலத்தை அவ்விடத்தில் வீசிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் அவ்விடத்தில் வீசப்பட்டதற்கான காரணம், உயிரிழந்த நபர் யார், அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




